வீட்டில் இருக்கும் பழைய டீ-சர்ட்டை பயன்படுத்தி சுலபமான முறையில் மாப் செய்வது எப்படி என்று இந்தக் குறிப்பில் காணலாம். இதன் மூலம் மாப் வாங்கும் பணம் மிச்சமாகும்.
வீட்டில் இருக்கும் பழைய டீ-சர்ட்டை பயன்படுத்தி சுலபமான முறையில் மாப் செய்வது எப்படி என்று இந்தக் குறிப்பில் காணலாம். இதன் மூலம் மாப் வாங்கும் பணம் மிச்சமாகும்.
நம் வீட்டில் விலை அதிகமான ஆடம்பர பொருட்கள் நிறைய இருக்கலாம். ஆனால், இவற்றை விட சில அத்தியாவசியமான பொருட்களை தான் நாம் அன்றாடம் பயன்படுத்துவோம். இவை, நம் வீட்டை சுத்தப்படுத்த உதவியாக இருக்கும்.
Advertisment
அந்த வகையில் துடைப்பம், மாப் போன்றவை எல்லோரது வீட்டிலும் தவறாமல் இடம்பெறும். அதன்படி, பயன்படுத்த முடியாமல் கிழிந்து போன பழைய டீ-சர்ட்டை உபயோகித்து, நாமே எவ்வாறு மாப் தயாரிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
வீட்டில் இருக்கும் பழைய டீ-சர்ட்டின் மேல் பகுதியை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது, டீ-சர்ட்டின் கீழ்ப்பகுதியை இரண்டாக மடித்து ஒவ்வொரு லேயராக முக்கால் பாகத்திற்கு வெட்ட வேண்டும்.
இவற்றை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு சிறியதாக வெட்டி எடுத்துக் கொள்வது அவசியம். இப்போது வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு குச்சியை எடுத்து, அதன் நுனிப்பகுதியில், வெட்டி வைத்திருக்கும் டீ-சர்ட்டை சுற்ற வேண்டும்.
Advertisment
Advertisements
இதன் மூலம் வீட்டிற்கு தேவையான மாப்பை நாமே செய்து கொள்ள முடியும். இதைப் பயன்படுத்தி வீட்டை எளிதாக சுத்தம் செய்யலாம். இப்படி செய்வதனால் மாப் வாங்கும் பணமும் மிச்சமாகும்.