நித்யா மோகனசுந்தரம்
/tamil-ie/media/media_files/uploads/2017/12/nithya-8-300x282.jpeg)
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1/4 கப்
உளுத்தம்பருப்பு - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
புழுங்கல் அரிசி - 1/2 கப்
மூறுங்கை கீரை - 1 கப்
சின்ன வெங்காயம் -1/4 கப்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 1
புளித்த தயிர் - 1டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவைகேற்ப.
செய்முறை:
அனைத்து பருப்புகளையும் ஒன்றாகவும் அரிசியை தனியாகவும் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். முதலில் அரிசியை போட்டு அரைத்து, அதனுடன் பருப்புகளை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் கீரை, வெங்காயம், மிளகுத்தூள், சீரகத்தூள், பச்சைமிளகாய், தயிர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தோசைக்கல் காய்ந்ததும் சிறிய அடைகளாக போட்டு எடுக்கவும்.வேண்டியவர்கள் அடையில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம்.
பயன்:
இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டால் விரைவில் குணம் காணலாம். மூறுங்கைகீரைக்கு பதில் வேறு கீரைகளையும் இந்த அடைக்கு பயன்படுத்தலாம்.