How to make Onion Chutney Recipe : மிகக் குறைந்தப் பொருள்களில் சட்டெனத் தயாராகும் இந்த வெங்காய சட்னி நிச்சயம் வித்தியாச சுவையை கொடுக்கும். ஒருமுறை இந்த ஸ்டைலில் செய்து பாருங்கள், மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும்.
தேவையான பொருள்கள் :
பெரிய வெங்காயம் - 120 கிராம் அல்லது 1 கப்
பூண்டு - 1 முதல் 2 பற்கள்
காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 2 முதல் 3
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
புளி கரைசல் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 5 முதல் 6
செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, சுடரைக் குறைத்து கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைச் சேர்க்கவும்.
பருப்பு பொன்னிறமாக மாறியபின், காஷ்மீரி சிவப்பு மிளகாய் சேர்க்கவும். மிளகாய் நிறம் மாறி நறுமணமடையும் வரை சில நொடிகள் வதக்கவும். காஷ்மீரி சிவப்பு மிளகாய் ஒரு நல்ல நிறத்தை தரும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்க்கவும்.
வெங்காயத்தை மென்மையானதும், சுடரை அணைத்து குளிர்விக்கவும்.
பிறகு முழு வெங்காய கலவையையும் மிக்சியில் மாற்றி, புளி கரைசல் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பிறகு தாளிப்புப் பொருள்களை சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்த்தால், சுவையான வெங்காய சட்னி ரெடி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil