சப்பாத்தியை சாஃபடாக செய்ய நாம் பல விதமான வீடியோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அப்படி செய்தாலும் கூட நமக்கு சாஃபடாக வராது. ஆனால் இந்த டிப்ஸை பின்பற்றினால் சப்பாத்தி சாஃப்டாக வரும்.
நாம் சப்பாத்தி செய்யும்போது, தண்ணீர் அளவும் மிகவும் முக்கியம். 2 ½ கப் கோதுமை மாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். தொடர்ந்து எண்ணெய்யை எல்லா பக்கத்தில் இருந்தும் கலந்துவிட வேண்டும். மாவு எடுத்த கப்பில் ஒன்றே கால் கப் தண்ணீர் சேர்க்கவும். இதற்கு அதிமாக தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டாம்.
தொடர்ந்து 1 நிமிசம் வரை பிசைய வேண்டும். அதிகமாக பிசைய வேண்டாம். மாவை தொட்டு பார்க்கும்போது கையில் ஒட்டக் கூடாது. மாவை நாம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற வைக்கும்போது அதில் உள்ள குளூட்டன் மாவை மிரதுவாக்கும்.
இந்த மாவை நீளமாக ஆக்க வேண்டும். அதை சிறிய கத்தி வைத்து சம அளவில் வெட்டி கொண்டு உருண்டைகளாக மாற்றவும். இதை நாம் நன்றாக வட்டமாக உருட்ட வேண்டும். மேலும் எல்லா உருண்டைகளிலும் மாவை தூவ வேண்டும்.
சப்பாத்தியை தேய்க்கும்போது நடுப்பகுதியில் மட்டும் தேய்க்க கூடாது. ஓரங்களில் நாம் தேய்க்க வேண்டும். சமமாக தேய்க்க வேண்டும். தொடர்ந்து சப்பாத்தியை இரண்டு கைகளில் மாற்றி மாற்றி வைக்கவும். அப்படி செய்தால், அதில் உள்ள அதிகமான மாவு தூள் கீழே விழுந்துவிடும்.
சப்பாத்தி கல்லை நன்றாக சூடாக்க வேண்டும். அப்புரம் சப்பாத்தி சுட வேண்டும். மேலும் நன்றாக புசு புசு என்று வரும் சப்பாத்திதான் மிரதுவாக இருக்கும் என்று நினைப்பது தவறு. சப்பாத்தி நன்றாக வேக அதிக நேரம் தேவைப்படாது. மாற்றி மாற்றி போடவும். சப்பாத்தியின் ஓரங்களில் வெள்ளை துணி வைத்து தொட்டு எடுத்தால் சப்பாத்தி நன்றாக வெந்து கிடைக்கும்.
இந்நிலையில் ஊறவைக்க நேரம் இல்லை என்றால், மாவில் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை சேர்க்க வேண்டும். மேலும் சப்பாத்தி போடும்போது, சிறிய வட்டமாக மாவை தேய்த்து, அதில் சிறிய அளவு எண்ணெய் சேர்த்து மாவை தூவி, மூடவும் அதை வட்டமாக உருட்டி சப்பாத்தி போடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“