தயிர் என்பது இந்த வெயில் காலத்தில் நாம் அனைவரும் சேர்த்துகொள்ள வேண்டும். இந்நிலையில் நல்ல கட்டியான தயிர் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
தயிரில், ப்ரோபயாட்டிக்ஸ் உள்ளது. இது நமது குடல் ஆரோக்கியத்திற்கு உதவும். ஜீரணத்திற்கு உதவும். இதில் புரத சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பி- வைட்டமின்ஸ் உள்ளது.
இந்நிலையில் நீங்கள் உடல் எடை குறைய இது உதவுகிறது. இது நமது எலும்புகளை வலுவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்நிலையில் எல்லா டயட் வகைகளிலும் நாம் இதை எடுத்து கொள்ளலாம்.
இந்நிலையில் கட்டியான தயிரை பெற நாம் என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ளலாம். நீங்கள் வீட்டில் சிறிய அளவு பிரஷ்யான தயிரை முன்பாகவே எடுத்து வைத்துகொள்ளவும்.
இந்நிலையில் நாம் புதிதான பாலை எடுத்துகொள்ளவும். அல்ட்ரா பாஸ்டுரைசேஷன் செய்த பாலை பயன்படுத்த வேண்டாம். இந்நிலையில் பாலை 43 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில், வைத்திருப்பது நல்லது. சூடான இடத்தில் வைத்திருப்பது நல்லது. நம் ஓவனில் அதன் விளக்கை ஆன் செய்து நாம் பாலை வைக்கலாம்.
இந்நிலையில் சுத்தமான பாத்திரத்தில் நாம் வைக்க வேண்டும். இந்நிலையில் 8 முதல் 10 மணி நேரம் வரை நாம் தயிராக மாறும் வரை காத்திருக்க வேண்டும். இந்நிலையில் தயிர் உருவானதும், நாம் அதை ஃப்ரிஜில் நாம் வைக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“