இந்த எண்ணெயில் ஆயில் புல்லிங் பண்ணுங்க… பல் சொத்தை, பல் கூச்சம் நீங்கும்; டாக்டர் கார்த்திகேயன்
இயற்கை வைத்தியங்கள் மூலம் பல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை மருத்துவர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் கூறி உள்ள டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
இயற்கை வைத்தியங்கள் மூலம் பல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை மருத்துவர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் கூறி உள்ள டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
இந்த எண்ணெயில் ஆயில் புல்லிங் பண்ணுங்க… பல் சொத்தை, பல் கூச்சம் நீங்கும்; டாக்டர் கார்த்திகேயன்
வசீகர புன்னகைக்கு முத்துப்போன்ற பற்களும், ஆரோக்கியமான ஈறுகளும் அவசியம். இதற்காக விலையுயர்ந்த சிகிச்சைகளை நாட வேண்டும் என பலர் நினைக்கின்றனர். ஆனால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய, இயற்கை வைத்தியங்கள் மூலம் பல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை மருத்துவர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் கூறி உள்ள டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
Advertisment
எண்ணெய்களின் சக்தி: தேங்காய் எண்ணெயை பற்களில் தடவி வருவது (ஆயில் புல்லிங்) கறைகளைப் போக்க உதவுவதோடு, ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவுக்கு கிராம்பு எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
சமையலறைப் பொருட்கள்: பற்பசையுடன் சிறிது பேக்கிங் சோடாவைச் சேர்த்துத் துலக்குவது, பற்களின் மஞ்சள் கறைகளை நீக்க முடியும். இதேபோல், வினிகரை நேரடியாகப் பயன்படுத்தாமல் தண்ணீரில் கலந்து பயன்படுத்துவதும், உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதும் சிறந்த பலன் தரும். எலுமிச்சை சாற்றையும் பற்களை வெண்மையாக்கப் பயன்படுத்தலாம் என மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார்.
ஈறுகளில் ஏற்படும் வீக்கம் அல்லது வலியை உடனடியாகக் குறைக்க, வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது சிறந்த முதல் உதவி. இயற்கையான கற்றாழை ஜெல் நேரடியாக ஈறுகளில் தடவுவது, புண்களை ஆற்றி, குளிர்ச்சியளிக்கும். பாக்டீரியாக்களை அழித்து ஈறுகளை வலுப்படுத்த கிராம்பு எண்ணெய் சிறந்த தேர்வாக விளங்குகிறது. யூகலிப்டஸ் எண்ணெய், பெருஞ்சீரக எண்ணெய் போன்றவையும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
Advertisment
Advertisements
தினசரி நாம் பின்பற்ற வேண்டிய எளிய பல் பராமரிப்பு நடைமுறைகள் மூலம், பற்சொத்தை போன்ற பொதுவான பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.