மஞ்சள் ஒரு சக்திவாய்ந்த மூலிகையாகும், இது பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இது ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் மிகவும் முக்கியமானது. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) எனும் பொருள் ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்டாக செயல்படுகிறது. நோய்களை எதிர்க்கும் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளரும் அழற்சி (Anti-inflammatory) தன்மை மூட்டுவலி (Arthritis), அழற்சி தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலில் ஏற்படும் வீக்கம், வலி போன்றவற்றை குறைக்கும். குடல் ஆரோக்கியம் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது. ஆமாச்சி (Ulcer) மற்றும் கல்லீரல் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. கல்லீரல் நலனை பாதுகாக்கும் உடலிலுள்ள நச்சு பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தோல் பராமரிப்பு, முகப்பரு (Acne), கரும்புள்ளி, தேமல் போன்ற தோல் நோய்களை சரிசெய்ய உதவுகிறது. தேய்த்து பயன்படுத்தினால் சருமத்தை பளபளப்பாக மாற்றும். இதய ஆரோக்கியம் இரத்தத்தில் கொழுப்பு அளவை குறைத்து, இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. புற்றுநோய் தடுப்பு மஞ்சளில் உள்ள கர்குமின் புற்றுநோயை தடுக்க உதவும் தன்மைகள் கொண்டுள்ளது. செல்களின் சீரற்ற வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இப்படி மஞ்சள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
மஞ்சள் சமையலிலும் முகத்துக்கு ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் மக்கள் மஞ்சளை கடைகளிலேயே வாங்குகிறார்கள். ஆனால், ஒரு 30 ஆண்டுகளுக்கு கிராமங்களில், விளையும் மஞ்சளை வேகவைத்து வீட்டிலேயே மஞ்சள் தூள் தயார் செய்வார்கள். ஆனால், கடைகளில் விற்கப்படும் மஞ்சள் தூள் மிகவும் மஞ்சள் நிறமாக இருப்பதற்கு, அதிலிருந்து குர்குமின் என்ற பொருளை மருந்துக்காக எடுத்துவிடுவதுதான் காரணம் என்று கூறுகிறார்கள். அதனால், பசும் மஞ்சளை வாங்கி நாம் வீட்டிலேயே மஞ்சள் தயார் செய்யலாம் என்கிறார் சென்னை கேர்ள் இன் லண்டன் யூடியூப் சேனலை நடத்தும் சம்யுக்தா.
மேலும், பசும் மஞ்சளை வாங்கி வேகவைத்து எப்படி மஞ்சள் தூள் அரைக்க வேண்டும் என்பதை சென்னை கேர்ள் இன் லண்டன் யூடியூப் சேனலில் சம்யுக்தா கூறியதை அப்படியே தருகிறோம்.
முதலில் நல்ல விளைந்த பச்சையான பசும் மஞ்சளை வாங்கிக் கொள்ளுக்கள். அதை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்துகொள்ளுங்கள். பிறகு, மஞ்சளை வேக வைக்க வேண்டும். ஒரு பெரிய பாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றுங்கள். இப்போது, அதில் கழுவி வைத்துள்ள மஞ்சளைப் போடுங்கள். உங்கள் வீட்டில் சணல் கோணிப் பை இருந்தால், அதை எடுத்து தண்ணீரில் நனைத்து அந்த பாத்திரத்தின் மேல் பகுதியை நன்றாக மூடிவிடுங்கள். சணல் சாக்குப் பை இல்லை என்றால், ஒரு டவல் எடுத்து அதை நனைத்து மூடிவிடுங்கள். ஒரு இருபது நிமிடம் நன்றாக வேக வையுங்கள். 20 நிமிடம் கழித்து மஞ்சள் வெந்து இருக்கிறதா என்று உடைத்துப் பாருங்கள். வெந்து இருந்தால், பாதுகாப்பாக தண்ணீரை வடித்துவிடுங்கள். பிறகு, வெந்த மஞ்சளை ஆற வையுங்கள். பிறகு, மஞ்சளை சிறு துண்டுகளாக நறுக்கி காய வையுங்கள் நன்றாகக் காய்ந்ததும் அதை மெஷினில் போட்டு அரைத்துக்கொள்ளுன்ங்கள். அவ்வளவுதான். வீட்டிலேயே தயார் செய்த மஞ்சள் தூள் ரெடி, இந்த மஞ்சள் தூள், ஆரஞ்ச் கலந்த மஞ்சள் நிறமாக நல்ல வாசனையாகவும் இருக்கும்.