ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஏகாதச என்னும் வடமொழிச் சொல்லுக்கு பதினொன்று என்று பொருளாகும்.
15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரனை மகாவிஷ்ணு அழித்தார். அப்போது வெளியான சக்திக்கு ஏகாதசி எனப் பெயர் வந்தது.
வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்' என்பது திருமால் வாக்கு .
இதில் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி மிக முக்கியமானது. இந்த நாளில் தென்னிந்தியாவில் சாதம் தவிர தோசை மற்றும் இட்லி உண்பார்கள். வட இந்தியாவில் பல்வேறு விதமான இனிப்புகள் எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் ஏகாதசி விரதத்தின்போது துளசி 7 முறை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடலை சூடாக்கும். மற்ற ஆகாரங்கள் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் ஏகாதசி விரதத்தை உணவு உட்கொள்ளாமல் கடைப்பிடிப்பதே உத்தமம் என்பது ஆன்றோர்கள் வாக்கு. விரதத்தின்போது மண் பானை குளிர்ந்த நீர் எடுத்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“