சர்க்கரையை உட்கொள்வது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு அனைத்து விதத்திலும் பாதிப்பை கொடுக்க தயாராக இருக்கும் பொருளாக விளங்குகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் சுதிர் குமார் சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார், அதில் அவர் கூறியதாவது: "ஒருவர் தனது சர்க்கரை "போதையை" கட்டுக்குள் கொண்டுவர ஒரு மாதம் ஆகும்".
டீயில் சர்க்கரை இல்லாமல் இருக்க முடியுமா என்ற மக்களின் கேள்விக்கு பதிலளித்த நிபுணர்: “டீயில் சர்க்கரை இருந்தாலும் இல்லையென்றாலும் சுவை நன்றாக இருக்கலாம். சர்க்கரையை அதிகம் உட்கொள்ளும் நபர்கள், இந்த பழக்கத்தில் இருந்து வெளிவர ஒரு மாதம் ஆகும், அதன் பிறகு, அவர் தனது தேநீரில் சர்க்கரையை சேர்க்க ஆசைப்பட மாட்டார்", என்றார்.
ஒருவர் சர்க்கரைக்கு அடிமையானால் என்ன நடக்கும்?
மணிப்பால் மருத்துவமனை டாக்டர் அபிஜித் போக்ராஜ் கூறுகையில், "ஒவ்வொரு முறை சர்க்கரை உட்கொள்ளும்போதும் மூளையில் உள்ள ரிவார்ட் சர்க்யூட்டில் மாற்றம் நடப்பதால், சர்க்கரை ஒரு போதைப் பொருளை போன்றது என்று கூறினார்.
குருகிராமில் உள்ள சி.கே.பிர்லா மருத்துவமனையின் உள் மருத்துவத்தின் ஆலோசகர் டாக்டர் துஷார் தயல் மேலும் கூறுகையில், சர்க்கரையை உட்கொள்ளும் போது, மூளை டோபமைனை வெளியிடுகிறது. இது ஒரு நபரை அதற்கு அடிமையாக்குகிறது.
"இந்த டோபமைன் தாக்கத்தை பெற ஒருவர், சர்க்கரையை அதிக அளவு உட்கொள்ள வேண்டும். மேலும், சர்க்கரை ஏங்குதல் ஆரம்பகால நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம், அங்கு இன்சுலின் எதிர்ப்புத் திறன் பெறுகிறது மற்றும் உடலால் இரத்த சர்க்கரையைப் பயன்படுத்த முடியாது" என்று டாக்டர் தயல் விளக்கினார்.
எவ்வளவு அளவு சர்க்கரை உட்கொண்டால் ஆபத்தாக முடியும்?
ஹைதராபாத் காமினேனி மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் என்.லக்ஷ்மி கூறியதாவது, "குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 25 கிராம், ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 36 கிராம் மற்றும் பெண்களுக்கு 25 கிராம் ஆகிய அளவை தாண்டக்கூடாது. இதற்கு அதிகமாக சர்க்கரை உட்கொண்டால் உடல் பருமன், 2ஆம் வகை நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்", என்றார்.
மேலும், டாக்டர் தயல் கூறியதாவது, "ஒரு பழக்கத்தை உடைக்க குறைந்தது 21 நாட்கள் ஆகலாம் என்று பொதுவாக நம்பப்படுகிறது, மேலும் சிலருக்கு சர்க்கரை அடிமையாதல் ஒரு பழக்கமாக கருதப்படுகிறது. எனவே, சில நபர்கள் தங்கள் சர்க்கரை அடிமைத்தனத்தில் முன்னேற்றங்களைக் காணத் தொடங்குவதற்கு ஒரு மாதம் போதுமானதாக இருக்கும். இருப்பினும், இன்னும் சிலருக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண அதிக நேரம் ஆகலாம்", எஎன்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.