ஒரு பெரிய பக்கெட் நிறைய உரம்... காய்கறி கழிவுகளை தூக்கி போடாமல் இப்படி செஞ்சு ரெடி பண்ணுங்க!
காய்கறிகளை பயன்படுத்திய பின்னர், அதன் கழிவுகளை தூக்கி போடாமல் அவற்றை சேகரித்து வைத்து எப்படி இயற்கையான முறையில் உரம் தயாரிப்பது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
காய்கறிகளை பயன்படுத்திய பின்னர், அதன் கழிவுகளை தூக்கி போடாமல் அவற்றை சேகரித்து வைத்து எப்படி இயற்கையான முறையில் உரம் தயாரிப்பது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
இயற்கையான முறையில் நம் வீட்டிலேயே செடிகளுக்கு தேவையான உரம் தயாரிப்பது குறித்து தற்போது காணலாம்.
Advertisment
ஒரு பழைய பக்கெட்டை எடுத்து அதன் வெளிப்புறத்தில் சிறியதாக துவாரங்கள் போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது காய்கறிக் கழிவுகள், காய்ந்த இலைகள், தேங்காய் நார், அரை கிளாஸ் அளவிற்கு புளித்த மோர் மற்றும் சிறுதளவு மணல் ஆகியவற்றை தனியாக எடுத்துக் கொள்ளலாம்.
இதையடுத்து, முதலில் பக்கெட்டில் காய்ந்த இலைகளை போட வேண்டும். அதன் பின்னர், சிறிதளவு மணல் போட்டு நிரப்ப வேண்டும். அடுத்ததாக காய்கறிக் கழிவுகள் மற்றும் ஒரு கைப்பிடி அளவிற்கு மணல் சேர்க்க வேண்டும். இதன் பின்னர், மீண்டும் சிறிதளவு தேங்காய் நார் சேர்த்து கலக்க வேண்டும். இறுதியாக புளித்த மோர் சேர்த்து கலக்கி, பக்கெட்டை மூடி விட வேண்டும்.
இதையடுத்து, மூன்று நாட்களுக்கு ஒரு முறை இதில் காய்கறிக் கழிவுகளை சேர்த்து கலந்து விட வேண்டும். இவற்றை சேர்க்கும் போது காய்ந்த இலைகள், பேப்பர் போன்றவற்றையும் சேர்த்து கலந்து விட விடலாம். இவ்வாறு சுமார் 30 நாட்களுக்கு செய்ய வேண்டும். இதன் பின்னர், இவற்றை மேலும் 30 நாட்களுக்கு அப்படியே காய வைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
அதன் பின்னர், இந்தக் கலவையை நன்றாக சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செடிகளுக்கு தேவையான இயற்கை உரம் தயாராகி விடும். இந்த இயற்கை உரத்தை நம் செடிகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவை ஆரோக்கியமாக வளரும். மேலும், இந்த உரத்தின் சிறு பகுதியை கொண்டு அதிகமான உரத்தையும் நாம் தயாரித்துக் கொள்ள முடியும். இதற்காக மீண்டும் காய்கறிக் கழிவுகளை சேகரித்து வைக்கும் போது, இந்த உரத்தையும் சிறிதளவு சேர்க்கலாம்.
கடைகளில் இருந்து இரசாயன உரங்களை வாங்கி மண்ணின் தரம் மற்றும் செடியின் ஆரோக்கியத்தை கெடுப்பதற்கு பதிலாக, இப்படி இயற்கை உரங்களை பயன்படுத்திக் கொள்வது நல்லது.