how to prepare ground nut laddu - வேர்க்கடலை லட்டு செய்வது எப்படி?
வேர்க்கடலை லட்டு செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி, அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் பலகாரம்.
Advertisment
இங்கு வேர்க்கடலை லட்டு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த தீபாவளி ஸ்பெஷலாக செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
பச்சை வேர்க்கடலை - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, வேர்க்கடலையை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
வேர்க்கடலையில் உள்ள தோல் தானாக வெளிவர ஆரம்பித்ததும் அதனை இறக்கி, தோலை நீக்கி ஆறியதும், மிக்ஸியில் போட்டு பொடி செய்து, அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து 5 நிமிடம் நன்கு அரைக்க வேண்டும்.
பின்பு அதனை தட்டில் போட்டு சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். இதில் நெய் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. வேர்க்கடலையிலேயே ஏற்கனவே எண்ணெய் இருப்பதால், சாதாரணமாக உருண்டைகளாகப் பிடிக்கலாம்.
இறுதியில் அதனை காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் இதனை வைத்து சாப்பிடலாம்.