tamil food recipes: வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் கெட்டி சால்னா எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை எண்ணெய் -தேவையான அளவு
மிளகு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பட்டை - சிறிதளவு
கல்பாசி - சிறிதளவு
பிரிஞ்சி இலை - 2
அன்னாசி பூ - 1
ஏலக்காய்- 2
கிராம்பு - 3
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 15
தக்காளி - 4
பெரிய வெங்காயம்- 2
தேங்காய் துருவல்- அரை மூடி
முந்திரி - 10
மஞ்சத்தூள் - 1/4 ஸ்பூன்
தனியா தூள் -2 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் -2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மிளகு, சோம்பு, சீரகம், சின்ன துண்டு பட்டை, கொஞ்சம் கல்பாசி, ஏலக்காய், கிராம்பு, 1 அன்னாசி பூ சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். 2 மீடியம் சைஸ் தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
பின்பு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் கசகசாவை 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். அதை மிக்ஸி ஜாரில் மாற்றி அதனுடன் 10 முந்திரி அரை மூடி தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
பிறகு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சிறிய பிரிஞ்சி இலை, கால் டீஸ்பூன் சோம்பு, சின்ன துண்டு பட்டை சேர்த்து வதக்கவும்.
நன்கு பொரிந்ததும் அதனுடன் நீளமாக வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் புதினா தழைகளை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
அதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது , இரண்டு மீடியம் சைஸ் தக்காளி பொடியாக நறுக்கியதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனோடு மஞ்சத்தூள், தனி மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதக்கினால் தான் குழம்பு கெட்டியாக வரும்.
பின்பு அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலக்கி 2 நிமிடங்கள் முடி வைக்கவும்.
பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கலக்கி வதக்க வேண்டும். கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அதன்பின்னர் ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
எண்ணெய் நன்றாக பிரிந்து வரும்போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான கெட்டி சால்னா ரெடி…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"