கோடை காலத்தில் உதடுகள் வெடிக்கின்றனவா? அப்போ இதை பயன்படுத்துங்கள்

உதட்டில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், உதடு ஈரப்பசையோடு அழகாக இருக்கும்

By: May 11, 2019, 1:14:17 PM

நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும்.

தற்போது காலநிலை மிகவும் மோசமாக உள்ளது. இப்படி காலநிலை மாறும் போது பலருக்கு உதடுகளில் வெடிப்புக்கள் மற்றும் கடுமையான வறட்சி ஏற்படக்கூடும். உதட்டில் வெடிப்புக்கள் இருந்தால்,

வெண்ணெய்

வெண்ணெய் வறட்சியான மற்றும் வெடிப்புக்கள் உள்ள உதட்டை சரிசெய்ய வெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் வெண்ணெயில் உள்ள புரோட்டீன் உதட்டின் ஈரப்பசையை தங்க வைக்கும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ வளமையாக உள்ளது. இது உதட்டில் உள்ள வறட்சியைத் தடுக்கும் சக்தி கொண்டது. எனவே பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் உதட்டை மசாஜ் செய்து வந்தால், குளிர்காலத்தில் உதட்டில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

கற்றாழை

கற்றாழை கற்றாழை வீட்டில் இருந்தால், தினமும் அதன் ஜெல்லை உதட்டில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், உதடு ஈரப்பசையோடு அழகாக இருக்கும்.

சர்க்கரை மற்றும் தேன்

சர்க்கரை மற்றும் தேன் தேன் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து, அதனைக் கொண்டு உதட்டை ஸ்கரப் செய்தால், சர்க்கரை உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீக்கும் அதே சமயம் தேன் உதட்டின் ஈரப்பசையைத் தக்க வைக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எணணெய் நிச்சயம் அனைவரது வீட்டிலும் தேங்காய் எண்ணெய் இருக்கும். அந்த தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, உதட்டில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், உதட்டின் ஈரப்பசையைத் தங்க வைக்கலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை ஆலிவ் ஆயிலை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, அதனை உதட்டில் தடவி வந்தால், உதட்டின் வறட்சி நீங்குவதோடு, உதட்டில் உள்ள கருமையும் நீங்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:How to protect lips from sun

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X