/indian-express-tamil/media/media_files/2025/04/15/Uj1IUX6HyoH6iABRve4F.jpg)
தொடர்ச்சியாக மாறி வரும் சுற்றுச்சூழல் காரணமாக இன்றைய சூழலில் குடிநீர் பற்றாக்குறை உருவாகி வருகிறது. இது மட்டுமின்றி கிடைக்கும் குடிநீரும் சுத்தமானதாக இருப்பதில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
சுகாதாரமற்ற முறையில் இருக்கும் குடிநீரை பயன்படுத்தும் போது ஏராளமான நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சில சமயங்களில் இதனை சரியாக குணப்படுத்தா விட்டால், உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் இருப்பதால் சுத்தமான குடிநீரை மட்டுமே பருக வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதற்காக பலரது வீடுகளில் தண்ணீர் சுத்தகரிப்பு கருவிகளை பயன்படுத்துகின்றனர். இவற்றை உபயோகப்படுத்தும் போது, தண்ணீரில் இருக்கும் அழுக்குகள் முற்றிலும் நீங்கி விடுவதாக விளம்பரம் செய்கின்றனர். ஆனால், அனைத்து தரப்பு மக்களாலும் இது போன்ற விலை உயர்ந்த இயந்திரங்களை வாங்கி பயன்படுத்த முடியாது.
மேலும், இந்த சுத்திகரிப்பு கருவிகளை பயன்படுத்தும் போது தண்ணீரில் இருக்கும் சத்துகளும் நீக்கப்படுகின்றன. எனவே, தண்ணீரில் இருக்கும் சத்துகளை அகற்றாமல், அதனை எளிமையாக சுத்திகரிப்பதற்கு ஒரு சிம்பிளான ட்ரிக் இருக்கிறது.
கடைகளில் கிடைக்கும் படிகார கல்லை இதற்காக வாங்கி கொள்ளலாம். இதனை குடிக்கும் தண்ணீரில் வைத்து எட்டு முறை சுற்ற வேண்டும். இப்படி செய்தால் குடிநீர் சுத்தமாக மாறி விடும் என்று கூறப்படுகிறது.
எனவே, குடிநீர் சுத்திகரிப்பு கருவி இல்லாதவர்கள் இந்த முறையை பின்பற்றலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதன் விலையும் சுமார் ரூ. 25-க்குள் வருவதால், எல்லோராலும் இதனை எளிதாக வாங்க முடியும்.
நன்றி - VALAMUDAN VAZHA Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.