ஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்!

நீண்ட நேரமாக சோர்வின்றி மாணவர்கள் படிப்பதற்கு, தேவையான மன திறனையும், சக்தியையும் சர்க்கரை அளிக்கும் திறன் கொண்டது.

Healthy Tips for Students : தேர்வு குறித்த அச்சம் தொற்றிக் கொண்ட உடனே, நம் நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றம் நிகழ்வதை கண் கூட காணலாம். அதில் முக்கியமான ஒன்று, உணவுப் பழக்க வழக்கம். தேர்வு சமயங்களில் உணவுப் பழக்கத்தில் பல்வேறு மாறுதல்களையும், சில கட்டுப்பாடுகளையும் கையாள்வது கட்டாயமாகிறது. சில மாணவர்கள் தேர்வு சமயத்தில் சாப்பிடாமல் தவிர்த்து விடுவர். பெற்றோர்களும் அதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. தேர்வு சமயத்தில் நினைவாற்றலை ஊக்கப்படுத்த குறிப்பிட்ட உணவுகள் பெரிதும் துணை புரிகின்றன. அவற்றை உண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதோடு, நல்ல நினைவாற்றலை தந்து, நினைத்த மதிப்பெண்களை பெறலாம்.

வீட்டில் செய்யப்படும் சூடான காலை உணவு :

பாக்கெட் செய்யப்பட்ட உணவு வகைகள், ஓட்ஸ் போன்றவற்றை காலை வேளையில் உண்ணும் போது, உடல் மற்றும் மூளையின் செயல்பாடுகளை தாமதப்படுத்தக் கூடிய மூலக்கூறுகள் இருப்பதால், தேர்வு சமயத்தில் மந்தமடையச் செய்யும். அதற்கு பதிலாக காலை வேளையில், இட்லி, உப்மா போன்றவற்றை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை உணவாக அளிக்கலாம்.

நெய் :

ஒமேகா 3-ன் முக்கிய ஆதாரமாக விளங்கும் நெய்யை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். நெய் நினைவாற்றலை தூண்டக்கூடியது. காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் ஒரு டீஸ்பூன் அளவு நெய்யை எடுத்துக் கொள்ளலாம்.

தயிர் :

தேர்வின் போது, மன அழுத்தத்தின் அளவை கட்டுப்படுத்தவும், மகிழ்ச்சிக்கான ஹார்மோன் செரோடோனின் வெளியீட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்திய சடங்குகளில் முக்கியமான ஒன்றான தயிரில், சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதை தேர்வின் போதும் மாணவர்களுக்கு கொடுக்கலாம்.

சர்க்கரை :

சர்க்கரை உடல் மற்றும் துவண்ட மூளையை மீண்டும் உற்சாகப்படுத்த உதவுகிறது. நீண்ட நேரமாக படிப்பதற்கு, தேவையான மன திறனையும், சக்தியையும் அளிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க, லட்டு, ஜாங்கிரி போன்ற இனிப்புகளை சாப்பிடலாம்.

அரிசி :

அரிசியில், பிரீ பயாட்டிக் இருப்பதால் வயிற்றை லேசாக வைத்திருக்க உதவுகிறது. நல்ல தூக்கத்தை தூண்டுகிறது.

மேலே உங்களுக்காக அளிக்கப்பட்டுள்ள தேர்வு கால டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. உங்க எக்ஸாம்ல அசத்துங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to reduce exam stress boost memory nutrition tips munmun ganeriwal curd rice sugar tamil

Next Story
100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி?Healthy food Tamil News: health benefits Jackfruit, palapalam benefits in tamil,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express