எலிகளுக்கு மரண பயம் காட்டும் இந்தப் பொருள்... பார்த்தாலே பக்கத்துல வராது; உங்க வீட்டுல இருக்கான்னு பாருங்க!

மனிதர்களுக்கு பரம எதிரியாக இருக்கும் எலிகளை எப்படி வீட்டில் இருந்து விரட்டலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மனிதர்களுக்கு பரம எதிரியாக இருக்கும் எலிகளை எப்படி வீட்டில் இருந்து விரட்டலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
rat

ஒவ்வொரு வீட்டிலும் எலிகளின் தொல்லை சமாளிக்க முடியாத ஒரு பிரச்சனையாக உள்ளது. எலிகள் வீட்டில் புகுந்துவிட்டால் நம் வீட்டில் உள்ள துணிகள், உணவு பொருட்கள் என அனைத்தையும் சேதப்படுத்திவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், எலிகள் நமக்கு அறியாமல் நம் உணவு பொருட்களை உண்பதால் நமக்கு பலவிதமான நோய்கள் உருவாகுகின்றன. இதனாலேயே மனிதர்கள் பெரும்பாலும் எலிகளை பரம விரோதியாக பார்க்கின்றனர். அவற்றை கொல்லவும் நினைக்கின்றனர்.

Advertisment

எலிகள் பெரும்பாலும் உங்கள் இல்லங்களை தங்கள் இருப்பிடமாக மாற்றுகிறது. அதுமட்டுமல்லாமல், உங்கள் இருப்பிடங்களில் குட்டிகளை போட்டு அவற்றை அதனின்  சொர்க்க பூமியாக மாற்றுகிறது. இப்படி, பல தொல்லைகளை தரும் எலிகளை எப்படி விரட்டலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். எலிகள் பெரும்பாலும் வேகமாக ஓடும் திறன் கொண்டவை. அவற்றை எலி வலைக்குள் பிடிக்க முயற்சிக்கும்போது அவை தப்பித்து மீண்டும் உங்கள் வீடுகளை ஆக்கரமிக்கும். 

பொதுவாக எலியைப் பிடிக்க மக்கள் பயன்படுத்தும் ஒரு ஆயுதம் தேங்காய் மற்றும் தக்காளி தான். அவற்றில் ரசாயன கலவையை சேர்த்து மக்கள் எலி வலைக்குள் வைத்து அவற்றை பிடிக்க முயற்சிப்பார்கள். இதனை தொன்றுதொட்டு மக்கள் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நவ நாகரீக மக்களால் இதனை பின்பற்றுவதில் சில சங்கடங்கள் உண்டாகிறது. சில நேரங்களில் இந்த ராசாயனங்களை குழந்தைகள் அறியாமல் எடுத்துவிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதற்கு பல எளிய வழிகள் உள்ளது. புதினாவின் வாசனை எலிக்கு பிடிக்காத ஒன்றாகும் . வீட்டுத் தீர்வுகள் மூலம் எலியை கொல்ல நினைப்பவர்கள், புதினா எண்ணெயில் பஞ்சை நனைத்து எலி பொந்திற்கு அருகில் வைக்கவும். இதன் வாசனை எலியின் நுரையீரலை சுருங்கச் செய்து கொன்று விடும். அடுத்து, மனித முடியைக் கண்டாலே எலி ஓடி விடும். இதற்குக் காரணம், இந்த முடியை ஒரு வேளை எலிகள் விழுங்கி விட்டால் அதற்கு மரணம் நிச்சயம்.

Advertisment
Advertisements

பூனையின் சிறுநீரை எலியின் பொந்திற்கு அருகில் தெளித்து விடுவதால் எலிகள் இறக்கலாம். எலிகளுக்கு பூனை சிறுநீரின் வாசனை தெரியாத காரணத்தால், அவற்றை நீர் என்று நினைத்து குடித்து இறக்க நேரிடலாம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: