காசி தமிழ் சங்கமம் இலவச பயணம்: பதிவு செய்வது எப்படி?

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்பதற்கு இலவசமாக பதிவு செய்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம். இதனை பதிவு செய்வதற்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்பதற்கு இலவசமாக பதிவு செய்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம். இதனை பதிவு செய்வதற்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kasi tamil sangamam

காசி தமிழ் சங்கமம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி ஆகிய மூன்று ஊர்களுக்கு இலவசமாக பதிவு செய்து கொள்ள, https://kashitamil.iitm.ac.in/registration இந்த லிங்கை பயன்படுத்தலாம்.

Advertisment

சென்னை சென்ட்ரல் அல்லது பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை தொடங்குவது முதல், மீண்டும் சென்னை வந்து சேருவதற்கான அனைத்து வசதிகளும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பாக மேற்கொள்ளப்படும்.

மொத்தமாக 8 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த பயனத்திற்காக, உணவு, நட்சத்திர விடுதியில் தங்குமிடம், உள்ளூர் பயணம், தரிசனம் உள்ளிட்ட அனைத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் வாங்கும் பொருட்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட நபர்கள் செலவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், இந்த பயணத்தின் போது தமிழ் தெரிந்த வழிகாட்டிகள் உடன் இருப்பார்கள். இந்த முறை கும்பமேளா நேரத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடும் வாய்ப்பு உள்ளது. அதிகப்படியான கூட்டத்திற்குள் செல்லாமல், காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயில் ஆகியவற்றில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

விருப்பம் உள்ளவர்கள் இதில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் ரூ. 1500 மட்டுமே பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இணைய வாயிலாக செலுத்த வேண்டும். ஆனால், பயணம் முடிந்து மீண்டும் சென்னை வருவதற்குள் இந்த பணம், பயனாளிகளின் வங்கி கணக்கில் திருப்பி செலுத்தப்படும்.

kashi Uttar Pradesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: