இந்த பூக்கள் சருமத்திற்கு சிறந்தவை என்று உங்களுக்கு தெரியுமா?

How to remove pimples: ரோஜா பூவைப்போல செம்பருத்தி பூவும் உங்கள் சருமத்திற்கு அதிசயத்தை செய்யலாம். உண்மையில், இது ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர்.

How to remove pimples: ரோஜா பூவைப்போல செம்பருத்தி பூவும் உங்கள் சருமத்திற்கு அதிசயத்தை செய்யலாம். உண்மையில், இது ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how to remove pimples, pimple face, rose face mask - பருக்களை நீக்குவது எப்படி? ரோஸ் மாஸ்க், அழகான முகம், முகப்பரு, lifestyle news

how to remove pimples, pimple face, rose face mask - பருக்களை நீக்குவது எப்படி? ரோஸ் மாஸ்க், அழகான முகம், முகப்பரு, lifestyle news

Skin Care Tips: பூக்கள் மீது விருப்பம் இல்லாத எவரும் இருக்க மாட்டார்கள். அவற்றின் சிறந்த மணம் மற்றும் அழகான வண்ணங்களைத் தவிர அவை தோல் பராமரிப்புக்கும் சிறந்தவை. ஆனால் இது நிறைய பேருக்கு தெரியாது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் தங்கள் சருமத்தை பாதுகாக்க மற்றும் ஆரோக்கியமானதாகவும் ஒளிரும் விதமாகவும் இருக்க செய்ய அதிகம் இயற்கையான வழிகளை தேடுகின்றனர். எளிதில் கிடைக்கக்கூடிய சில பூக்களை வைத்து விரைவான DIY களைப் பற்றி அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.

Advertisment

ரோஜா முக கவசம் (Rose face mask)

தோல் பராமரிப்பு தொடர்பான எல்லாவற்றிற்கும் ரோஜா சிறந்த மலராக கருதப்படுகிறது. இது சருமத்தில் சில அற்புதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது, மேலும் உங்கள் DIY தோல் பராமரிப்பு செய்முறையில் ரோஜா இதழ்கள் இருக்க வேண்டும். முக கவசம் (face mask)தயாரிக்க இந்த பூவைப் பயன்படுத்தலாம், ஏனெனில் இது சருமத்தில் மென்மையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இது உங்கள் மன அழுத்தத்தை நீக்கி, புத்துணர்வூட்டி இளமையுற செய்யும் திறன் கொண்டது. மேலும், முகப்பரு பாதிப்புக்குள்ளான தோல் வகைகளுக்கும் இந்த உக கவசம் சிறந்தது.

Advertisment
Advertisements

இதற்ககாக உங்களுக்கு சில ரோஜா இதழ்கள், ஒரு தேக்கரண்டி தேன், இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு தேக்கரண்டி தயிர் ஆகியவை தேவைப்படும். ரோஜா இதழ்கள் தூள் ஆகும் வரை நன்றாக அரைக்கவும். இதனுடன் மீதம் உள்ள பொருட்களைப் போட்டு ஒரு பேஸ்ட் ஆகும் வரை நன்றாக கலக்கவும். இந்த பேஸ்டை தோல் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்றாக பூசி 20 முதல் 30 நிமிடங்கள் உலர வைக்கவும். குறிப்பிட்ட நேரம் முடிந்த பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வித்தியாசத்தை நீங்களே பார்க்கலாம்.

தூக்கம் எவ்வளவு முக்கியம் தெரியுமா? கூந்தல் பராமரிப்பு எளிய வழிகள்

முகத்திற்கு செம்பருத்தி மாய்ஸ்சரைசர்

ரோஜா பூவைப்போல செம்பருத்தி பூவும் உங்கள் சருமத்திற்கு அதிசயத்தை செய்யலாம். உண்மையில், இது ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் என்று நம்பப்படுகிறது. பூவில் சில இயற்கை அமிலங்கள் உள்ளன, அவை முகத்தை சுத்தம் செய்து உள்ளே இருந்து ஒளிரச் செய்யும். இது முகப்பரு உருவாவதையும் தடுக்கும்.

இதற்கு உலர்ந்த செம்பருத்தி இதழ்கள், இரண்டு தேக்கரண்டி ஏதாவது சமையல் எண்ணெய் கிடைத்தால் பாதாம் எண்ணெய், சிறிய அளவு கற்றாழை ஜெல், சிறிது குங்குமப்பூ அல்லது kesar ஆகியவை தேவைப்படும். செம்பருத்தி இதழ்களை அரைத்து அதனுடன் பாதாம் எண்ணெய் சேர்க்கவும். அதை microwave வைத்து இரண்டு நிமிடம் சூடாக்கவும். பிறகு சிறிது கற்றாழை மற்றும் குங்குமப்பூவை சேர்த்து கலக்கி முகத்தில் பூசவும். இது ஒரு மாய்ஸ்சரைசர் என்பதால் இந்த கலவையை உங்கள் கை மற்றும் கால்களிலும் தடவலாம். தொடந்து பயன்படுத்தி வித்தியாசத்தை உணருங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: