Pimple Remove Tips: முகப்பருக்களை விரைவில் நீக்க இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது!

How to Remove Pimples Naturally: விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்

How to Remove Pimples Naturally: விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pimple Remove Tips: முகப்பருக்களை விரைவில் நீக்க இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது!

How to Remove Pimples on Face: முகப்பரு என்பது பலருக்கும் சவால் அளிக்கக் கூடிய தொல்லையாகும். வருவதோடு மட்டுமல்லாமல், தழும்பையும் ஏற்படுத்திவிட்டு தான் போகும். சிலர் பருக்களை உடைப்பதையே வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கு தழும்புகள் அதிகமாகவே காணப்படும். பொடுகுத்தொல்லை, உடல் சூடு காரணமாக முகப்பரு வரலாம். சைட் அடிக்கிறதுனாலயும்கூட இது வருதுன்னு நிறைய பேர் சொல்லக் கேட்டிருப்போம். இது உண்மையில்லை. அப்படி எந்த வகையினால் முகப்பரு ஏற்பட்டிருந்தாலும் எளிமையான முறையில் அதை எப்படி நீக்குவது? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

Advertisment

50 மில்லி நல்லெண்ணெயுடன் மிளகை ஊற வைக்க வேண்டும். 20 நாட்கள் கழித்துப் பயன்படுத்த வேண்டும். இதை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும்.

வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர, விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.

திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும். திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவி வந்தாலும் பருக்கள் நீங்கும்.

Advertisment
Advertisements

குங்குமாதி லேபத்தைப் பருக்களின் மீது தடவி வர, பருக்கள் மறைவதோடு தழும்புகளும் விரைவில் நீங்கும்.

பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும்.

அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் இது நீங்கும்.

மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும். வெட்பாலை தைலத்தைப் பயன்படுத்தி வர மலச்சிக்கல் நீங்குவதோடு, முகப்பருவும் மறையும்.

பொடுகால் ஏற்படும் முகப்பருவுக்குப் பொடுதலை இலைச்சாற்றைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்குவதோடு, முகப்பருக்கள் சீக்கிரம் மறையும்.

எலுமிச்சைச் சாற்றுடன் நீர் சேர்த்து பரு உள்ள இடங்களில் தடவி இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பருக்கள் மறையும். சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கையும் எலுமிச்சைச் சாறு நீக்கும்.

Lifestyle Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: