வெறும் தண்ணீர் போதும்… இப்படி செய்தால் துணியில் எந்த சாயம் பட்டாலும் 5 நிமிடத்தில் கிளீன் பண்ணலாம்!
அன்றாட வாழ்வில் துணிகளில் கறைகள் படுவது தவிர்க்க முடியாத ஒன்று. உணவு கறை, பேனா மை, எண்ணெய் கறை என ஒவ்வொரு கறையும் ஒவ்வொரு விதமான தலைவலியை ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டே இந்த கறைகளைச் சுலபமாக நீக்கலாம்.
அன்றாட வாழ்வில் துணிகளில் கறைகள் படுவது தவிர்க்க முடியாத ஒன்று. உணவு கறை, பேனா மை, எண்ணெய் கறை என ஒவ்வொரு கறையும் ஒவ்வொரு விதமான தலைவலியை ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டே இந்த கறைகளைச் சுலபமாக நீக்கலாம்.
வெறும் தண்ணீர் போதும்… இப்படி செய்தால் துணியில் எந்த சாயம் பட்டாலும் 5 நிமிடத்தில் கிளீன் பண்ணலாம்!
அன்றாட வாழ்வில் துணிகளில் கறைகள் படுவது தவிர்க்க முடியாத ஒன்று. உணவு கறை, பேனா மை, எண்ணெய் கறை என ஒவ்வொரு கறையும் ஒவ்வொரு விதமான தலைவலியை ஏற்படுத்தும். ஆனால், இனி கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டே இந்த கறைகளைச் சுலபமாக நீக்கலாம்.
Advertisment
சூயிங்கம் கறையை நீக்க: துணியில் ஒட்டிய சூயிங்கம்மை நீக்க, அந்த இடத்தை உள்பக்கமாகத் திருப்பி, அதன் மீது சில நொடிகள் ஐஸ் கட்டியைத் தேய்க்க வேண்டும். பிறகு, துணியை முன்பக்கமாகத் திருப்பி, அதே பகுதியில் மீண்டும் ஐஸ் கட்டியைத் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால், சூயிங்கம் மெதுவாக கழண்டு வரும். தேவைப்பட்டால் இதை மீண்டும் செய்யலாம். சூயிங்கம் நீங்கிய பிறகு, துணியை வழக்கம் போல் துவைக்கலாம்.
சாயம் போன கறையை நீக்க: வேறு துணிகளின் சாயம் படிந்து கறை ஆன வெள்ளை நிற ஆடைகளைச் சரிசெய்ய, பெரிய பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து, அதில் கறை படிந்த துணியைப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். லேசான கறைகளுக்கு 2 நிமிடங்கள் போதும். பிறகு, குளிர்ந்த நீரில் துவைத்து, பிழிந்து உலர விட வேண்டும். பிடிவாதமான கறைகளுக்கு, இந்த முறையை மீண்டும் மீண்டும் செய்யலாம். இந்த முறையில் பேக்கிங் சோடா, ப்ளீச் அல்லது எலுமிச்சை எதுவும் தேவையில்லை.
எண்ணெய் கறையை நீக்க: துணிகளில் உள்ள தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய் கறைகளை நீக்க, கறை படிந்த பகுதியில் சில துளிகள் வலி நிவாரண தைலத்தைப் (pain relief balm) தடவி, மெதுவாகத் தேய்த்து, பிறகு நீரில் துவைக்க வேண்டும். துணி காய்ந்ததும், எண்ணெய் கறை முற்றிலும் மறைந்துவிடும்.
Advertisment
Advertisements
மஞ்சள் மற்றும் குழம்பு கறைகளை நீக்க: மஞ்சள், குழம்பு அல்லது காபி போன்ற கறைகள் வெள்ளை துணிகளில் ஏற்பட்டால், சில துளிகள் ஹார்பிக் டாய்லெட் க்ளீனரை கறை மீது நேரடியாகத் தடவி, பிரஷ் கொண்டு தேய்த்து, நீரில் அலச வேண்டும். இந்தக் கறைகள் புதியதாக இருக்கும்போதே இந்த முறையைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பேனா மை கறையை நீக்க: குழந்தைகளின் பள்ளிச் சீருடைகளில் ஏற்படும் பேனா மை கறைகளை நீக்க, கிளிசரின், கை சுத்திகரிப்பான் (hand sanitizer) அல்லது டெட்டால் போன்றவற்றை பயன்படுத்தலாம். பேனா மை கறையின் மீது சிறிதளவு கிளிசரினை ஊற்றி, ஒரு பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால், மை கறை படிப்படியாக மறைந்துவிடும்.