உங்கள் ஃபேரைட் ஆடையில் டீ கொட்டி விட்டதா? இனி கவலை வேண்டாம்.
டாக்டர் சந்தோஷ் பாண்டே, (acupuncturist and naturopath, Rejua Energy Center, Mumbai) எலுமிச்சை அல்லது வினிகரை பயன்படுத்தி கறைகளை எப்படி அகற்றுவது என்பதைப் பகிர்ந்துள்ளார்.
எலுமிச்சை மற்றும் வினிகர் இரண்டிலும் தேயிலை கறையை உடைக்க உதவும் இயற்கை அமிலங்கள் உள்ளன.
எலுமிச்சை
எலுமிச்சை சாற்றை கறையின் மீது பிழியவும்.
கறை படிந்த பகுதியை பழைய டூத் பிரஷைப் பயன்படுத்தி தேய்க்கவும்.
இயற்கையான ப்ளீச்சிங் விளைவுக்காக வெயிலில் வைக்கவும்.
வழக்கம் போல் ஆடையை துவைக்கவும்.
வினிகர்
சம அளவு வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீரை கலக்கவும்.
தேயிலை கறை படிந்த இடத்தில் இந்த சொல்யூஷனை தடவவும்.
15-30 நிமிடங்கள் வைக்கவும்.
குளிர்ந்த நீரால் அந்த இடத்தை கழுவவும்.
கவனிப்பு வழிமுறைகளின்படி ஆடைகளை துவைக்கவும்.
இது எப்படி வேலை செய்கிறது?
வினிகர் அதன் இயற்கையான டியோடரைசிங் பண்புகளுக்கு பெயர் பெற்றது. தேயிலை கறையை நீக்க பயன்படுத்தும் போது, அது கறையுடன் தொடர்புடைய விரும்பத்தகாத நாற்றங்களை நடுநிலையாக்கவும் அகற்றவும் உதவும்.
எலுமிச்சை சாறு, அதன் புதிய சிட்ரஸ் வாசனையுடன், சுத்தம் செய்யும் போது மற்றும் அதன் பிறகு ஒரு இனிமையான நறுமணத்திற்கு பங்களிக்கிறது.
குறிப்பு: எந்தவொரு சாத்தியமான சேதத்தையும் தவிர்க்க எப்போதும் ஆடை பராமரிப்பு லேபிள்களை சரிபார்த்து, முதலில் ஒரு தெளிவற்ற பகுதியில் சோதிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“