சட்டையில் டீ கறை போக மாட்டேங்குதா? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க; உடனே கிளீனாகும்!

டீ, காபி கறை துணிகளில் இருந்தால் அதனை நீக்க அதிக விலை கொடுத்து சோப்புகள் அல்லது பவுடர்களை வாங்குவதற்குப் பதிலாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுத்தம் செய்யக் கூடிய ஈஸி டிப்ஸ் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

டீ, காபி கறை துணிகளில் இருந்தால் அதனை நீக்க அதிக விலை கொடுத்து சோப்புகள் அல்லது பவுடர்களை வாங்குவதற்குப் பதிலாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுத்தம் செய்யக் கூடிய ஈஸி டிப்ஸ் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
How to remove tea strains from clothes

சட்டையில் டீ கறை போக மாட்டேங்குதா? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க; உடனே கிளீனாகும்!

நாம் வீட்டில் சாப்பிடும் போது, டீ அல்லது காபி குடிக்கும் போது, காய்கறி நறுக்கும் போது கறைகளால் நம் துணிகள் அலுக்காகலாம். இதனால் நமக்கு பிடித்த துணிகளை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். ஒரு சில நேரங்களில், நாம் இந்த கறைகளை சோப்பு அல்லது பவுடர் கொண்டு கழுவலாம், ஆனால் சில நேரங்களில் கறைகள் மிகவும் கடினமானவை மற்றும் சட்டைகள் அல்லது பேண்டுகள் போன்ற நமக்கு பிடித்த ஆடைகளை வீணடிக்க செய்யும். சில ஆடைகளை அதிக பணம் கொடுத்து வாங்கி இருப்போம். அந்த துணிகள் இப்படி ஆகும் போது சற்று வேதனையாக இருக்கும். டீ, காபி கறை துணிகளில் இருந்தால் அதனை நீக்க அதிகவிலை கொடுத்து சோப்புகள் அல்லது பவுடர்களை வாங்குவதற்குப் பதிலாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுத்தம் செய்யக் கூடிய ஈஸி டிப்ஸ் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

Advertisment

சில நேரங்களில், மக்கள் தங்கள் ஆடைகளில் கறை இருந்தால் குறிப்பாக அது அவர்களுக்கு பிடித்தமான அல்லது விலையுயர்ந்த ஆடையாக இருந்தால் மன வேதனை அடைகின்றனர் அல்லது வருத்தப்படுகின்றனர். கறைகளை சுத்தம் செய்ய நீங்கள் வாங்கக்கூடிய பொருட்கள் நிறைய உள்ளன, ஆனால் நீங்கள் பணத்தை சேமிக்க விரும்பினால் அந்த கறைகளை அகற்றுவதற்கு நீங்கள் ஏற்கனவே வீட்டில் வைத்திருக்கும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தலாம்.

காய்கறி கறைகளை எவ்வாறு அகற்றுவது?

உங்கள் துணியில் காய்கறிக்கறையை கண்டால், கறையின் மீது சிறிது வெள்ளை வினிகரைப் போட்டு, சிறிது பேக்கிங் சோடாவை சேர்ப்பதன் மூலம் அதை அகற்றலாம். பேஸ்ட் செய்ய நீங்கள் அவற்றை ஒன்றாக கலக்கலாம். அதன்பிறகு, துணியை சில நிமிடங்கள் ஊற வைக்கவும். பின், கறையை மெதுவாக தேய்த்து வழக்கமான தண்ணீரில் துணியை துவைக்கவும். காய்கறி கறைகளை அகற்ற எலுமிச்சை கூட பயன்படுத்தலாம்.

Advertisment
Advertisements

மை கறைகளை நீக்க இதை செய்யுங்கள்

உங்கள் துணிகளில் பேனாக்களில் இருந்து மை கறை இருந்தால், கவலைப்பட வேண்டாம். பேக்கிங் சோடாவை (பேக்கிங் பவுடர் அல்ல) சிறிது குளிர்ந்த நீரில் கலந்து பேஸ்ட் செய்யவும். பின்னர், ஒரு பருத்தி துணியை பயன்படுத்தி கறையின் மீது கவனமாகத் துடைக்கவும், ஆனால் சுற்றிலும் மை பரவாமல் கவனமாக இருக்க வேண்டும்.

டீ அல்லது காபி கறைகளை அகற்ற?

டீ அல்லது காபியை கரை துணிகளில் ஏற்பட்டால் அதனை உடனே சுத்தம் செய்வது நல்லது. கறையைப் போக்க எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை வினிகர் கலவையைப் பயன்படுத்தலாம். ஆனால் கவனமாக இருங்கள். இந்த கலவை சில துணிகளுக்கு மிகவும் வலுவாக இருக்கும், எனவே துணி நன்றாகவும் உறுதியானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும். மற்றொரு வழி, கறை படிந்த இடத்தில் ஏதேனும் ஒரு ஷாம்பு போட்டு டூத் பிரஷ் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கறை போக வாய்ப்புள்ளது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: