ஆண், பெண் என அனைத்து பாலினத்தவருக்கும் கை இடுக்குகள் கருமையாக இருக்கும். இதனை போக்குவதற்கு பியூட்டி பார்லர்களுக்கு செல்ல வேண்டும் என சிலர் நினைப்பார்கள். ஆனால், அதிகமாக பணம் செலவாகுமோ என்ற எண்ணத்தில் சிலர் தயங்குவார்கள். அந்த வகையில் வீட்டில் இருந்தபடியே, இதனை எளிதாக எப்படி போக்குவது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
முதலில் தக்காளியை மிக்ஸியில் அரைத்து அதில் இருக்கும் சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பாதி எலுமிச்சை பழச்சாறு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவை சேர்த்து கலக்க வேண்டும். இறுதியாக இந்தக் கலவையுடன் நாம் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் கலவையை கை இடுக்குகளில் தேய்த்து சுமார் 3 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் கழித்து இதை கழுவி விடலாம். இப்படி செய்தால் கை இடுக்குகளில் இருக்கும் கருமை நீங்கி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.