/indian-express-tamil/media/media_files/2025/06/02/0AvNf59h2gVZxoZ19MTS.jpg)
ஈக்களை நிரந்தரமாக விரட்டுவது எப்படி என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்காகவே ஈஸி டேஸ்டி ரெசிபிஸ் (Easy-tasty recipes) என்ற யூடியூப் சேனலில் சூப்பரான 5 டிப்ஸ்களை அளித்துள்ளனர்.
வெயில் காலத்தில் மாம்பழம் சீசன், பலாப் பழம் சீசன் சேர்ந்து வருவதால் வீடுகளில் ஈக்களின் தொல்லை அதிகமாகவே இருக்கும். உங்கள் வீட்டில் ஈக்கள் தொல்லை தாங்க முடியவில்லையா? கவலைப்படாதீர்கள், புதினாவை அரைத்து தெளித்தால் ஈக்கள் எட்டிப் பார்க்காது. இதுமட்டுமல்ல, இதோ உங்களுக்காக ஈக்களை விரட்ட 5 டிப்ஸ்களை தருகிறோம்.
வீட்டை நாம் சுத்தமாக துடைத்து வைத்திருந்தாலும், வெயில் காலத்தில் ஈக்களின் தொல்லை சற்று அதிகமாகவே இருக்கும். பகலில் இந்த ஈக்களின் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். ஈக்களுக்கு மாலையில் கண்கள் தெரியாது என்பதால், எங்கேயாவது போய் மறைந்துகொள்ளும். மீண்டும் பகல் வந்ததும் ஈக்கள் மீண்டும் படையெடுத்து வந்து மொய்க்கும். இந்த ஈக்களை நிரந்தரமாக விரட்டுவது எப்படி என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்காகவே ஈஸி டேஸ்டி ரெசிபிஸ் (Easy-tasty recipes) என்ற யூடியூப் சேனலில் சூப்பரான 5 டிப்ஸ்களை அளித்துள்ளனர். அவற்றை உங்களுக்கு அப்படியே தருகிறோம்.
வீட்டில் மொய்க்கும் ஈக்களை விரட்ட வேண்டும் என்றால், முதலில் ஒரு டம்பளர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 டேபிள்ஸ்பூன் உப்பு போட்டு நன்றாகக் கரைத்து ஈக்கள் மொய்க்கும் இடங்களில் தெளியுங்கள், ஈக்கள் பறந்துபோய்விடும்.
இரண்டாவது, ஈக்களுக்கு புதினா இலை, துளசி இலையின் வாசம் அறவே புடிக்காது. அதனால், புதினா இலையை அரைத்து அதை தண்ணீரில் கலந்து வடிகட்டி அந்த தண்ணீரைத் தெளித்தால் ஈக்கள் காணாமல் போய்விடும்.
அதே போல, துளசி இலையை அரைத்து அந்த தண்ணீரை ஈக்கள் மொய்க்கும் இடத்தில் தெளித்தால், ஈக்கள் பறந்துபோய்விடும். துளசி இலை வாசத்துக்கு ஈக்கள் வரவே வராது.
ஈக்களைக் கொல்ல ஒரு வழி, ஒரு டம்பளர் பாலில் 3 டீஸ்பூன் சர்க்கரை போடுங்கள், 1 டீஸ்பூன் மிளகு தூள் போடுங்கள். நன்றாகக் கொதிக்க வையுங்கள். சூடு ஆறியதும், ஒரு அகலமான தட்டில் ஊற்றி ஈக்கள் மொய்க்கும் இடத்தில் வைத்துவிடுங்கள். பால், சர்க்கரை வாசனை ஈக்களை ஈர்க்கும். ஈக்களும் வந்து பாலில் விழுந்து இறந்துவிடும்.
ஈக்களைக் கொல்ல இன்னொரு டிப், ஒரு கிளாஸ் பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கால் பாகம் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரையைப் போட்டு கலக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதன் மீது ஒரு காகிதத்தில் கோன் மாதிரி செய்து அதில் ஒரு இடத்தில் ஓட்டை போட்டு வைத்துவிடுங்கள். அதன் வழியாக ஈக்கள் விழுந்து இறந்துவிடும்.
ஈக்களை விரட்ட வேண்டும் என்றாஅல், பட்டையை நன்றாகப் பொடி செய்து அந்த தண்ணீரைத் தெளித்தால் ஈக்கள் வராது.
அதே போல, எலுமிச்சை பழத்தை பாதியாகக் கட் பண்ணி அதில், கிராம்பு சொறுகி வைத்தால், எலுமிச்சை, கிராம்பு வாசனை ஈக்களுக்கு புடிக்காது என்பதால், ஈக்கள் வராது.
உங்கள் வீட்டில் ஈக்கள் தொல்லை இருந்தால், இந்த 5 டிப்ஸ்களைப் பயன்படுத்தி ஈக்களை விரட்டுங்கள். ஈக்கள் தொல்லைக்கு குட் பை சொல்லுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.