/indian-express-tamil/media/media_files/O1loFn0GeqLF06vMS5AB.jpg)
Oil cooking hacks
வீட்டில் அடிக்கடி எண்ணெய்யில் பொரித்த உணவை சாப்பிடுவீர்களா? அப்படியானால் உணவை வறுத்த பிறகு, எண்ணெயில் கணிசமான அளவு எச்சம் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர் அதனால் அந்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தாமல் அப்புறப்படுத்துவது உண்டு.
ஆனால், ​​​​சோள மாவைப் பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் பயன்படுத்திய எண்ணெய்யில்உள்ள அனைத்து அசடுகளையும் எடுத்து விடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த வீடியோ பாருங்க
தேவையான பொருட்கள்
சோளமாவு
தண்ணீர்
செய்முறை
1 பகுதி சோள மாவு எடுத்துக் கொள்ளுங்கள்.
2 பங்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரண்டையும் கலக்கவும்.
60-70 டிகிரி செல்சியஸ் எண்ணெயில் ஊற்றவும்.
மாவை வெளியே எடுக்கவும்.
சூடான எண்ணெயில் சோள மாவுக் கலவையைக் கொட்டி, மெதுவாகக் கிளறுவது, சோள மாவு எச்சத்தை உறிஞ்சுவதால் அசுத்தங்களை வெளியேற்ற உதவுகிறது.
குறிப்பு: எண்ணெயை மீண்டும் பயன்படுத்தலாமா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன், நீங்கள் முன்பு வறுத்த உணவு வகைகளைக் கருத்தில் கொள்வதும் முக்கியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us