ஒரு ஸ்பூன் இதை மட்டும் கொடுங்க… காய்ந்த செடி கூட தளிர்க்கும்!

பட்டுப்போன காய்ந்த செடியை கூட மீண்டும் துளிர்க்க செய்ய இந்த ஒரு சொல்யூஷனை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். அது என்ன? எப்படி கொடுக்க வேண்டும்? என்பது பற்றி கௌரி ராமமூர்த்தி என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பட்டுப்போன காய்ந்த செடியை கூட மீண்டும் துளிர்க்க செய்ய இந்த ஒரு சொல்யூஷனை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். அது என்ன? எப்படி கொடுக்க வேண்டும்? என்பது பற்றி கௌரி ராமமூர்த்தி என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
New Update
hydrogen peroxide fertilizer for plants

ஒரு ஸ்பூன் இதை மட்டும் கொடுங்க… காய்ந்த செடி கூட தளிர்க்கும்!

நன்கு பச்சை பசேலென நிறைய இலைகளையும், பூக்களையும் கொண்ட செடிகள் திடீரென பட்டுப்போய் இலைகள் எல்லாம் காய்ந்து போக நிறைய காரணங்கள் உள்ளன. இலைகள் எப்பொழுது தன் நிறத்தை இழந்து காய்ந்துபோக ஆரம்பிக்கிறதோ, அந்த இடத்தில் பிரச்னை உள்ளது என்பதை முன்கூட்டியே நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே இந்த பிரச்னையை சரிசெய்து விட்டால் மீண்டும் எவ்வித இடையூறும் இல்லாமல் உங்கள் வீட்டுச் செடி பூத்துக் குலுங்கும். பட்டுப்போன காய்ந்த செடியை கூட மீண்டும் துளிர்க்க செய்ய இந்த ஒரு சொல்யூஷனை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். அது என்ன? எப்படி கொடுக்க வேண்டும்? என்பது பற்றி கௌரி ராமமூர்த்தி என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisment

பச்சை பசேலென இருந்த இலைகள் திடீரென மஞ்சள் நிறத்தில் மாறுவதும், பின்பு காய ஆரம்பிப்பதும் வேர் அழுகல் நோயால்தான் இருக்கக் கூடும். செடி வைக்கும் தொட்டியின் அடியில் ஒரு துளையை போட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் ஊற்றும் தண்ணீரானது அதிகப்படியாக ஆகும்போது, அந்த ஓட்டை வழியாக தண்ணீரானது வெளியேறி மண் ஈரப்பதம் குறையாமல் அப்படியே இருக்கும். அந்த ஓட்டையில் திடீரென கல் போன்ற ஏதாவது ஒன்று அடைத்துக் கொண்டால் நீங்கள் ஊற்றும் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடும். தேங்கி நிற்கும் தண்ணீரின் மூலம் வேர் பகுதியானது அழுக செய்யும். வேரழிவினால் செடியும் நாளடைவில் காய்ந்து போய்விடும். தண்ணீரை குறைவாக ஊற்றும் செடிகளும், வெயில் அளவிற்கு அதிகமாக செடிகளில் படும்போது அந்த செடிக்கு தேவையான தண்ணீர் போதாமல் போய் செடி பட்டுப்போகும் வாய்ப்புகள் உண்டு. மேலும் செடிகளைத் தாக்கும் சில வகையான நோய்களாலும் வேர் பகுதியானது அழுகிப் போகும் அபாயம் உண்டு. இப்படி பல வகையான காரணங்கள் வேரழுகல் நோய்க்கு அமைந்து இருக்கக் கூடும். எந்த வகையை வேரழுகல் நோய் ஏற்பட்டு இருந்தாலும், நீங்கள் அந்த செடியை சுற்றிலும் இருக்கும் மண் பகுதியை லேசாக நீக்கி மண்ணை தளர செய்ய வேண்டும்.

மண்ணை காற்றோட்டமாக தளர செய்த பிறகு வேரை எடுத்து பாருங்கள். வேர் பகுதியானது முற்றிலுமாக காய்ந்து உடைந்து போகும் நிலையில் இருந்தால் அந்த செடியை ஒன்றுமே செய்ய முடியாது அதற்கு பதிலாக ஓரளவுக்கு ஈரப்பதத்துடன் வேர், தண்டு பகுதியானது இருக்குமேயானால் கட்டாயம் அந்த செடியை மீண்டும் உயிர்ப்புடன் பச்சை பசேலென மாற்றிவிட முடியும். அவ்வகையான செடிகளுக்கு 20ml அளவிற்கு ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் சொல்யூஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இது சாதாரணமாக எல்லா மருந்தகங்களிலும் 30 ரூபாய்க்கு கூட கிடைக்கும். அதனுடன் 200ml அளவிற்கு தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். அதில் வேர்ப்பகுதியை அரைமணி நேரம் அளவிற்கு மூழ்கி இருக்குமாறு செய்யுங்கள். பின்னர் அதனை எடுத்து மண்ணை வளப்படுத்தி மீண்டும் மண்ணைப் போட்டு மூடி வைத்து விடுங்கள். பின்னர் காய்ந்துபோன பகுதிகளை எல்லாம் வெட்டிவிடுங்கள். பச்சையாக இருக்கும் பகுதிகளை மட்டும் அப்படியே விட்டு விடுங்கள். நீங்கள் வெட்டிய இடத்தில் மட்டும் மாட்டு சாணம் அல்லது மஞ்சள் தூளை குழைத்து தடவி கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க! காய்ந்து போன இந்த செடி மீண்டும் ஒரே வாரத்தில் பச்சைபசேலென இலைகளை துளிர்த்து பூத்துக்குலுங்க செய்துவிடும்.

Hydrogen-Peroxide

Advertisment
Advertisements

ஹைட்ரஜன் பெராக்சைடு(Hydrogen Peroxide Solution) என்பது ரசாயன பொருள் அல்ல, மேலும் H2O2 மூலக்கூறாகிய இது உங்களுடைய செடிகளுக்கு ஆக்சிஜனை அதிகமாக கொடுத்து நன்கு வளர செய்யும். ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு லிட்டர் தண்ணீரில் 5ml அளவிற்கு இந்த சொல்யூஷனை கலந்து செடிகளின் வேர் பகுதிகளுக்கு விட்டு வாருங்கள். பட்டுப்போன செடி மட்டுமல்ல எல்லா வகையான செடிகளுக்கும் இதனை இலை அல்லது வேர் பகுதிகளுக்கு கொடுத்து வந்தால் பூச்சி தாக்குதலுக்கு உட்படாமல் உங்களுக்கு நல்ல காற்றோட்டமான ஆக்சிசன் கிடைத்து நன்கு செழித்து வளரத் துவங்கும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: