/indian-express-tamil/media/media_files/2025/04/30/BAtrMgjlJYNlaUGBm0tr.jpg)
How to sharpen knife scissors at home
உங்க வீட்ல இருக்க ஷார்ப்னஸ் குறைஞ்ச கத்தி, கத்திரிக்கோல், பீலர், இல்ல அருவாமனை எதுவா இருந்தாலும் கவலையே வேண்டாம். புதுசா வாங்குறதுக்கு பதிலா, உங்க வீட்ல இருக்க சாதாரண டூத் பேஸ்ட் போதும், பளபளன்னு ஷார்ப் ஆக்கிடலாம்!
இதோ சிம்பிள் டெக்னிக்:
முதல்ல, ஷார்ப்னஸ் குறைஞ்ச அந்த கத்தி அல்லது கத்திரிக்கோல் பிளேடுல நல்லா டூத் பேஸ்ட் தடவிடுங்க. இதுல ரெண்டு முக்கியமான விஷயம் இருக்கு. ஒன்னு, டூத் பேஸ்ட் ஒரு நல்ல கிளீனரா வேலை செஞ்சு அந்த பிளேடுல இருக்க அழுக்கு, கறை எல்லாத்தையும் நீக்கிடும். ரெண்டாவது விஷயம் என்னன்னா, இத வச்சுதான் நம்ம ஷார்ப் பண்ணப்போறோம்.
இப்ப ஒரு அகல் விளக்கை திருப்பி வச்சுட்டு, அது மேல கொஞ்சமா உப்பு தூவுங்க. வீடியோவுல காட்டுற மாதிரியே அந்த டூத் பேஸ்ட் போட்ட கத்தி, கத்திரிக்கோலை நல்லா தேய்ச்சு விடுங்க. அவ்வளவுதான்! நிமிஷத்துல உங்க கத்தி, கத்திரிக்கோல், பீலர் எல்லாமே புதுசாட்டம் ஷார்ப் ஆகிடும்.
இனிமே உங்க வீட்டுல கத்தி ஷார்ப் பண்ண, கத்திரிக்கோல் ஷார்ப் பண்ண வேற எந்த மெனக்கெடவும் தேவையில்லை. இந்த ஈஸியான டெக்னிக்கை யூஸ் பண்ணி பாருங்க!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.