Advertisment

படுத்த உடனே குழந்தையைப் போல தூங்க 'பட்டர்ஃபிளை டேப்பிங்' டெக்னிக்: இந்த வீடியோ பாருங்க

வீடியோவில் காட்டியபடி ஒரு பட்டாம்பூச்சி போல உங்கள் கட்டைவிரலையும் சேர்த்து ஒன்றாக இணைத்து, உங்கள் உள்ளங்கைகளை மார்பில் வைக்கவும். மார்பின் இடது மற்றும் வலது பக்கத்தில் மாறிமாறி தட்டவும்.

author-image
WebDesk
New Update
butterfly tapping, sleep,

How to Fall Asleep Fast

ஆயுர்வேதமாக இருந்தாலும் சரி, நவீன அறிவியலாக இருந்தாலும் சரி, நம் மனம் மற்றும் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு ஒரு நல்ல இரவு தூக்கத்தின் அவசியத்தை நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

Advertisment

ஏனென்றால், தூக்கமின்மை உங்கள் நல்வாழ்வை கணிசமாக பாதிக்கும், மற்றும் இருதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு உங்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

சில நேரங்களில் தூங்கும் போதுதான் நம் மூளை வழக்கத்தை விட சுறுசுறுப்பாக இருக்கும். அப்படி உங்கள் மூளையில் நிறைய எண்ணங்கள் ஓடும் போது தூக்கம் வரவில்லை என்றால்,  பட்டர்ஃபிளை டேப்பிங் நுட்பத்தை முயற்சிக்கவும், என்கிறார் ஜோலி ஸ்லோவிஸ் (somatic anxiety coach).

வீடியோவில் காட்டியபடி ஒரு பட்டாம்பூச்சி போல உங்கள் கட்டைவிரலையும் சேர்த்து ஒன்றாக இணைத்து, உங்கள் உள்ளங்கைகளை மார்பில் வைக்கவும். மார்பின் இடது மற்றும் வலது பக்கத்தில் மாறிமாறி தட்டவும். ஓரிரு நிமிடங்களில், உங்கள் உடல் அமைதியாகத் தொடங்கும். இது வேகமாக தூங்க உதவுகிறது, என்று ஜோலி இன்ஸ்டாகிராம் வீடியோவில் கூறினார்.

டேப்பிங் நுட்பம் இரவு நேரத்தில் நன்றாக தூங்குவதற்கு ஒரு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது அனைவருக்கும் வேலை செய்யாது என்று டாக்டர் இம்ரான் கான் விளக்கினார். ((PT), consultant head physiotherapist, Wockhardt Hospitals, Mira)

அதிக மன அழுத்தத்துடன் இருப்பது, தூங்குவதில் சிரமம், மோசமான தூக்கம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தூக்கமின்மை போன்றவற்றை ஏற்படுத்தும்.

இந்த ஹேக் சிலருக்கு வேலை செய்யலாம், ஆனால் அனைவருக்கும் இல்லை. ADHD அல்லது இதே போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பட்டர்ஃபிளை டேப்பிங் ஹேக்குடன் தூங்குவது கடினமாக இருக்கலாம், ஏனெனில் நிலையான கை அசைவுகள் கவனச்சிதறலை உருவாக்கலாம், இதன் விளைவாக தூங்குவது வழக்கத்தை விட தாமதமாகும்.

sleep trick

குறைந்தபட்சம் 7 முதல் 8 மணிநேரம் தரமான தூக்கத்தில் கவனம் செலுத்தும் தூக்க அட்டவணையை உருவாக்குவது போன்ற சில வாழ்க்கை முறை மாற்றங்களை முயற்சி செய்யலாம்.

இந்த நுட்பத்தை முயற்சிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை, ஆனால் மன அழுத்தத்தின் மூல காரணத்தை கண்டறிய  வேண்டும். உங்கள் உடலை ரிலாக்ஸ் செய்ய தூங்கும் முன் உங்களுக்கு பிடித்த இசையை கேட்பது போன்ற மன அழுத்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் உதவும்.

பாதுகாப்பான மற்றும் நிதானமான சூழலை உருவாக்குவது உங்கள் தூக்கத்தின் தரத்தை அமைதிப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவும், என்று டாக்டர் கான் கூறினார்.

Read in English: We ask an expert if butterfly tapping is the ultimate hack to sleep like a baby

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment