இயல்பாக சுரக்கும் உச்சந்தலை எண்ணெய்,மிகவும் அதிகமாக சுரந்தால் அது ஒட்டுமொத்த கூந்தலையே பிசுபிசுப்பாக மாற்றிவிடும். மேலும், இந்த எண்ணெய், வெயில் காலாத்தில் அதிகாக வரும் வியர்வையோடு ஒன்றாகும் போது, நமது தலைமுடி, கூந்தல்/தலைமுடி மிகவும் எருச்சல் உடையதாகிவிடும்.
பிசுபிசுப்பான எண்ணெய் தலைமுடியை தவிர்க்க கீழ் உள்ளவற்றை பயன்படுத்துங்கள்:
கலா காய் ( Acai berries ) : ஃபோலிக் அமிலம், ஜின்க் வைட்டமின்கள் ஏ, சி, ஈ,பி போன்றவைகள் இதில் இருப்பதால் , உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவும்.
கெமோமில் ( Chamomile ) மூலிகை செடியில் இருந்து செய்யப்படும் உணவு பொருட்கள் நாம் சாப்பிடும் போது, நமது கூந்தல் அடர்த்தியாகிறது.
கிரீன் டி - உச்சந் தலையில் இருக்கும் ஈரப்பதத்தை சரி செய்வதற்கும், பொடுகு உருவாகுவதையும் தவிர்க்கும்.
பொதுவாக கெரட்டின் புரதங்கள் சேர்க்கப்பட்டுள்ள எந்த உணவு பொருட்களும் கூந்தல் பிசுபிசுப்பை தவிர்க்கும் வகையில் தான் இருக்கும்.
உலர்ந்த கூந்தலுக்கு தேவைப்படும் கண்டிஷனிங் எண்ணெய்கள் வீட்டிலே செய்வது எப்படி:
1 டீஸ்பூன் - ஜோஜோபா எண்ணெய்
1 டீஸ்பூன் - ஆலிவ் எண்ணெய்
1 டீஸ்பூன் - ஷியா வெண்ணெய்
1/2 டீஸ்பூன் - அம்லா தூள்
1/2 டீஸ்பூன் - கரிசலாங்கனி
1/2 டீஸ்பூன் - செம்பருத்தி
2 மிலி - ரோஸ்மேரி எசன்ஷியல் எண்ணெய்
தயார் செய்வது எப்படி:
எப்படி தயாரிப்பது: அம்லா தூள், கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகியவற்றை ஒன்றாக வேகவைத்து ஜோஜோபா, ஆலிவ் வெண்ணெயுடன் கலக்க வேண்டும். சிறிது நேரம் அது குளுமையான பின்பு, ரோஸ்மேரி எசன்ஷியல் எண்ணெய்யைக் கலக்க வேண்டும். பின்பு, தயாரான எண்ணெய்யை உங்கள் உச்சத் தலையில் தேக்க வேண்டும்.
எண்ணெய் பிசுபிசுப்பான தலை முடிக்கு தேவையான கண்டிஷனிங் லோஷன் செய்வது எப்படி
தண்ணீர் ( போதுமான அளவு )
2 டீஸ்பூன் - அதிமதுரம்
1 டீஸ்பூன் - எலுமிச்சை சாறு
1 தேக்கரண்டி - தேன்
10 சொட்டுகள் - தேயிலை மர எண்ணெய்
10 சொட்டுகள் - துளசி எண்ணெய்
தயார் செய்வது எப்படி:
அதிமதுர பொடியை தண்ணீரில் 10 முதல் 15 வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்பு இதனோடு, எலுமிச்சை சாறு, தேன், துளசி எண்ணெய் ,தேயிலை மர எண்ணெய்யை கலக்க வேண்டும். பின்பு, உருவான எண்ணெய்யை உங்கள் உச்சந்தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.