நீங்கள் உடல் எடை குறைக்க வேண்டும் என்றும் அதற்கான சரியான தகவல்களை தேடிக் கொண்டிருந்தால், இது உங்களுக்கு உதவியாக இருக்கும். தற்போது சமூகவளைதளத்தில் அதிகபடியான உடல் எடை குறைவான அதிக தகவல்கள் குவிகின்றன. இந்நிலையில் நீங்கள் உடல் எடை குறைக்கும் பயணத்தை ஊட்டச்சத்து நிபுணர் சிம்ரான் கோஸ்லா சொல்லும் விஷயத்தை வைத்து தொடங்கலாம்.
அதிக நார்சத்து
நாம் அதிகமாக நார்சத்து உணவை சாப்பிடும்போது, நாள் முழுவதும் நமக்கு வயிறு நிரம்பியதுபோல் இருக்கும். முழுதானியங்கள், ஓட்ஸில் இருக்கும் கரையக்கூடிய நார்சத்து, தண்ணீருடன் சேர்த்து உடலுல் உள்ள அதிகபடியான கொழுப்பை நீக்கிவிடும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும்.
1000 கலோரிகளுக்கு 10 கிராம் வரை நார்சத்தை நாம் சாப்பிட வேண்டும். இப்படி செய்வதால், குடலில் நல்ல பேக்டீரியா வளரும், இதனால் குடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
அதிக புரத சத்து
உங்கள் சதைகளை சரியாக்கும் மற்றும் உருவாக்கும். நன்றாக சாப்பிட்டது போல உணர்வு ஏற்படும், இதனால் நாம் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் ஸ்நாக்ஸ் சாப்பிட மாட்டோம். புரத சத்து நமது உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவுகிறது. இது பசியை தூண்டும் ஹார்மோன் ஆன கர்லினை குறைக்கும். பசியை குறைக்கும் ஹார்மோன்களான ஜி.எல்.பி1-யை அதிகரிக்கும். புரத சத்தை நாம் எடுத்துகொள்ளும்போது அதை ஜீரணிக்க அதிக கலோரிகள் தேவைப்படும்.
முட்டை, நட்ஸ், விதைகள், சிக்கன், மீன்கள், பால் பொருட்களை நாம் சாப்பிடலாம்.
அதிகம் நடப்பது
முடிந்தவரை அதிகம் நடக்க முயற்சி செய்ய வேண்டும். ஒரே இடத்தில் அமராமல் நாம் நடந்துகொண்டு இருக்கலாம். வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதாமன உடல் பயிற்சியை செய்யலாம்.
மன அழுத்தத்தை குறைப்பது
இதற்காக நலல் பாடல் கேட்பது, யோகா செய்வது, தியானம் செய்வது என்பதில் அதிக கவனம் செலுத்தினால் உடல் எடை குறைய உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“