இதர விஷயங்களைப் போலவே, அதீத சிந்தனையும், உங்களுடைய உடல் நலனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
Advertisment
மனம் என்பது ஒரு விசித்திரமான ஒன்று. அதன் கொள்ளளவு என்ன என்பதற்கு முடிவு ஏதும் இல்லை. மூளையின் உத்தரவுகளுக்கு உடல் எதிர்வினையாற்றுகிறது. அதனால்தானோ என்னவோ, மன நலன் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது. அதீத சிந்தனை ஒரு பழக்கமாக , உங்கள் உடல்நலனில் பாதிப்பை ஏற்படுதக் கூடும். மன சோர்வை ஏற்படுத்துவதுடன், பீதியை உருவாக்குதல், மன அழுத்தம், சித்தபிரமையையும் ஏற்படுத்தக் கூடும். நிலைமை உங்கள் கட்டுக்குள் அடங்காமல் போவதாக உணர்ந்தால், உங்கள் மனதுக்குள் புத்துயிர் அளிக்க நீங்கள் முயற்சி செய்து பார்ப்பதற்கான சில விஷயங்கள்
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
Advertisment
Advertisements
கவனத்தை வேறுபக்கம் திருப்புதல்
அதீதமாக சிந்திப்பது, செயலில் செல்வாக்கு செலுத்தும் பழக்கமாக, எங்கு வேண்டுமானலும் இழுத்துச் செல்வதாக இருக்கிறது. வட்டத்துக்குள் உங்கள் மனதை ஓடச்செய்வது போல என்ன வேண்டுமானாலும் செய்யும். வலையில் இருந்து தப்பிக்க, உண்மையில் நீங்கள் அனுபவித்து ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும்போது, உங்கள் மனம் மிகவும் சத்தமாக ஆகிறது. அப்போது நீங்கள் உங்கள் கவனத்தை வேறுபக்கம் திசை திருப்ப முடியும். வெளியில் செல்லுங்கள், சைக்கிள் ஓட்டுங்கள் அல்லது குறைந்த வேகத்தில் ஓடுங்கள், கொஞ்சம் டான்ஸ் கூட ஆடலாம். புதிய மெனுவை சமைக்க கற்றுக் கொள்ளலாம். அடிப்படையில் உங்கள் மன இறுக்கத்தை குறைக்கும் எந்த ஒரு செயலையும் செய்யலாம்.
மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம்
உங்கள் வாழ்க்கையில் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக நீங்கள கருதும்போது, அந்த தருணத்தில் இருந்து பின்னால் வந்து சுவாசத்தை உற்று நோக்குங்கள். இன்னும் நீங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறீர்கள் என்பது தெரியவரும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் மனதை அமைதிப்படுத்துவதுதான். இதற்கு யோகா, தியானம் உங்களுக்கு உதவக் கூடும். ஒரு அமைதியான இடத்தில் உங்களை நீங்களே, உங்கள் சுவாசத்தை உணருங்கள். தினமும் இதனைச் செய்யும்போது, நிச்சயமாக உங்கள் மூளையின் இரைச்சல் குறையும்.
யாருக்காவது உதவுங்கள்
நிலைமை கட்டுப்பாட்டை மீறி அதிகரித்திருப்பதாக நீங்கள் உணர்ந்தால், யாராவது ஒருவருக்கு நன்மை செய்யுங்கள், அப்போது உங்கள் வாழ்க்கையில் புத்துணர்வான முன்னேற்றம் ஏற்படும். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவீர்கள். யாராவது ஒருவரின் தினத்தை வெளிச்சமாக்கினால், அது உங்களுக்கு விசித்திரமான உணர்வு சக்தியைக் கொடுக்கும். நீங்கள் தகுதியானவர், ஏற்றவர் என்பதை நீங்கள் உணர முடியும்.
உங்கள் வெற்றியை பற்றி சிந்தியுங்கள்
பாதகமான எண்ணங்களால் உங்கள் மனம் நிறைந்திருக்கும்போது, உங்கள் சாதனைகளைப் பற்றி நினைப்பது பிரச்னைக்கு உரியதுதான். ஆனால், முயற்சி செய்யுங்கள். ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டு, என்னவெல்லாம் நீங்கள் சாதனை செய்ய வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள். அது உங்கள் சிறிய சாதனைகளாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு அதில் பங்கு இருக்க வேண்டும். நீங்கள் விசித்திரமானவர் என்று உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கலாம். ஒரு தருணத்தில் உங்கள் மனம் துன்பத்தை ஏற்படுத்தும் போதெல்லாம் மேலும் திறன் கொண்டதாக இருக்கும்.
உங்களை நீங்களே மன்னியுங்கள்
ஒரு கடந்த கால தவறாக இருந்தாலும் கூட அது உங்களை விழுங்கிவிடும். ஒரு மனிதனாக, வாழ்க்கையில் நல்லதை செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தவறுகள் என்பது அந்த ஒப்பந்த த்தில் ஒரு பகுதிதான். கடந்து செல்வதற்கு கற்றுக் கொள்ளுங்கள், உங்களுக்குள் இணக்கமாக இருங்கள். காட்சிகளை மீண்டும், மீண்டும் ஓட்டிப்பார்ப்பது தொடர்ந்து பார்க்கும் பட்சத்தில் அதனால் எந்தப் பயனும் இல்லை, நீங்கள் விரும்பினால் அது வித்தியாசமாக வெளிப்பட்டிருக்கும்.
உதவி கேளுங்கள்
இதனை தனியாக எதிர்கொள்ளாதீர்கள். நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள். உதவி கேளுங்கள். குடும்ப உறுப்பினரிடம் அல்லது நண்பரிடம் செல்லுங்கள், உங்கள் இதயத்தை திறந்து உணர்ச்சிகளைக் கொட்டுங்கள். ஒரு வல்லுநரின் உதவியை நாடுவது இன்னும் நல்லது.