How to stop thinking about work during your free time
How to stop thinking about work during your free time : பணியின் போதும், ஓய்வின் போதும், நம் மனதை வெவ்வேறு விதமாக வரையறுக்கும் யுக்திகளை நாம் கையாள வேண்டும். நாம் வேலை செய்யாமல் இருக்கும்போது கூட வேலையைப் பற்றி சிந்திப்பது எரிச்சலூட்டுவதாக இருக்கும். ஒரு வித நோக்கத்துடன் இது இல்லாவிட்டாலும் கூட, எண்ணங்கள் தொடர்ச்சியாக நமக்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. வேலையில் இருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ள முடிவதில்லை.
Advertisment
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
இதனை முறைப்படி செயல்படுத்தும்போது மன அழுத்தத்திலிருந்து நம்மை தடுக்கலாம். நாம் இதனை உணரும் முன்பு, நாம் களைப்படைந்து விடுவோம். இது நல்ல உணர்வு அல்ல. எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், இது மிகவும் ஆரோக்கியமற்றதும் கூட. ஒவ்வொருவரும் வேலை மற்றும் வாழ்க்கை இரண்டுக்கும் இடையே நடுநிலைத்தன்மையை கடைபிடிக்க மனதை இயக்கவும், அமைதிப்படுத்தவும் வேண்டும்.
இந்த உரையாடலில், மனநல வல்லுநரும், எழுத்தாளருமான கை வின்ச் தமது வேலை தொடர்பாக எழும் சிந்தனைகளுடனான போராட்ட அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். ஒருமுறை எப்படி வெறுமையாக உணர்ந்தேன் என்பது பற்றி அவர் சொல்கிறார். எனினும், சூழல் எழும் போது இன்னொருவருக்கு உதவாது. “என்னுடைய அலுவலகத்தில் மேற்கொள்ளும் வேலையில் பிரச்னை இல்லை. நான் வீட்டில் இருக்கும்போது வேலையைப் பற்றி பல மணி நேரம் ஆழமாக சிந்திப்பதுதான் பிரச்னை. என்னுடைய அலுவலகத்தில் ஒவ்வொரு நாள் இரவும் கதவுகளை பூட்டி விடுகின்றேன். ஆனால், என் தலையில் இருக்கும் சிந்தனை எனும் கதவு தொடர்ந்து திறந்து கிடக்கிறது. மன அழுத்தம் வெள்ளமென பாய்கிறது,” என்றார்.
“வேலையில் இருக்கும்போது அது தொடர்பான அழுத்தத்தை நாம் அனுபவப் பூர்வமாக உணர்வதில்லை. அதற்கு பதில், புத்துயிர் பெற முயற்சிப்பதற்கு வீட்டுக்குத் திரும்பும்போதுதான் அதை நாம் உணர்கின்றோம். நமது ஓய்வு நேரத்தை மீட்டெடுக்க வேண்டியது முக்கியம். மன அழுத்தத்தைக் குறைக்க நம்மை உற்சாகப்படுத்தும் செயல்களைச் செய்யலாம். இதில், பெரிய சீரழிவை நாம் சந்திப்பது ஆழமாகச் சிந்திப்பது தொடர்பானதுதான். ஒவ்வொரு முறையும் நாம் இதைச்செய்யும்போது, நாம் பொதுவாக நமது மன அழுத்த த்துக்கான எதிர்வினையை செயல்படுத்த வேண்டும்,” என்றார்.
மேலும் பேசிய வின்ச், “மனிதர்கள் சிந்தித்தபடியே இருப்பதைப் போல மாடுகள் தங்கள் உணவை செரிக்கச் செய்கின்றன. அவைகள் விஷயங்களை மேலும், மேல்லும் மெல்லுகின்றன. மாடுகள் இவ்வாறு இருக்கும்போது, நிச்சயமாக மனிதர்கள் இவ்வாறு இருக்க முடியாதா. வருத்தமளிக்கும், மன அழுத்தம் தரும் விஷயங்களை மெல்லுகின்றோம். அவைகளைப் போல நாம் செய்வது, முழுவதும் பயன ற்றதாக இருக்கிறது. முடிக்காத வேலைகள் பற்றி அல்லது உடன் பணியாற்றுவோருடனான பதற்றங்கள் குறித்து அல்லது எதிர்காலம் குறித்து பீதியுடன் கூடிய கவலை அல்லது நாம் எடுத்த யூகமான இரண்டாவது முடிவுகள் குறித்து மனதுக்குள் தொடர்ச்சியாக பல மணிநேரம் சிந்தித்தபடியே இருக்கின்றோம்,” என்றார்.
“பணியின் போதும், ஓய்வின் போதும், நம் மனதை வெவ்வேறு விதமாக வரையறுக்கும் யுக்த்திகளை நாம் செயல்படுத்த வேண்டும். முதலில், உங்கள் வீட்டில் வேலை பார்ப்பதற்கு என்று வரையறுக்கப்பட்ட இடத்தை உருவாக்குங்கள். முடிந்தவரையில் அங்கு மட்டும் வேலை பார்க்கவும். அடுத்ததாக, வீட்டில் இருந்து பணியாற்றும்போது, வேலையின் போது என்ன உடை அணிவீர்களோ அதை அணிந்து கொள்ளுங்கள். சிந்தனைகளோடு போராடுவது மிகவும் கடினம். வேலையில் இருந்து வீட்டுக்கு வருவதை நீங்கள் ஒரு சடங்குபோல செய்தால், சிந்தனைகளை பயனுள்ள வடிவத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் வெற்றி பெற முடியும்,” என்று வின்ச் பரிந்துரைக்கிறார்.
தமிழில் இந்த கட்டுரையை எழுதியவர் பாலசுப்ரமணி கார்மேகம்