நமது நகம் அடிக்கடி உடைவது தொடர்ந்து நடைபெறும் விஷயமாக உள்ளது. குறிப்பாக நமது நகங்கள் வலுவற்று இருந்தால் இது நடக்கும். அதிகமாக கைகளை கழுவுவது, தொடர்ந்து பாத்திரம் கழுவுவது, இதனால் நமது நகம் சக்தி வாய்ந்த கெமிக்கல் பொருட்களால் சேதமாகும்.
வயதாவதால் நகம் வளர்வது மெதுவாகும். வயதாவதால் வரட்சி ஏற்படும். உடலில் உள்ள மற்ற நோய்களாலும் நகம் உடைய வாய்ப்பு உள்ளது குறிப்பாக தைராய்டு, சரும பிரச்சனைகள், சதுக்கு குறைபாடு உள்ளதாலும் ஏற்படும்.
மெனிக்கியூயர் செய்யும்போது பயன்படுத்தப்படும் ஜெல்கள், நெயில் ஆர்ட், மோசமான நெயில் பாலிஷ் பயன்படுத்துவதால்கூட நகம் உடையும். இந்நிலையில் நாம் சிலவற்றை செய்து நகத்தை உடையாமல் பார்த்துகொள்ள முடியும். நாம் சுத்தம் செய்யும்போது கையில் கையுறைகளை பயன்படுத்த வேண்டும்.
செயற்கையான நகங்களை வைத்துகொள்வதற்கு சில காலம் இடைவேளைவிடலாம். புரத சத்து, பையோட்டின் சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவதால், சக்தி வாய்ந்த கிரடினை உருவாக்க உதவும்.
நகத்தை கடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். இதுபோல சரியான கால இடைவேளையில் நகத்தை சரியாக வெட்டிக்கொள்ள வேண்டும். ஆல்கஹால் இல்லாத மாய்ஸ்சரைசர் மற்றும் கண்டிஷ்னரை பயன்படுத்த வேண்டும்.
நைலான் நார்சத்து உள்ள நெயில் பாலிஷை பயன்படுத்தலாம். நெயில் பாலிஷை நீக்க அசிடோன் இல்லாத ரிமூவரை பயன்படுத்தவும்.
நாம் இரவில் தூங்கும்போது, நமது நகத்திற்கு பெட்ரோலியம் ஜெல்லியை வைத்து தடவிக்கொள்ளலாம். ஆலிவ் எண்ணெய் அல்லது சூடான தண்ணீரில் ஏதேனும் ஒரு எண்ணெய்யை சேர்த்து கையை முக்கி வைக்கலாம்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“