பூ வாங்கி இப்படி ஸ்டோர் பண்ணுங்க… 15 நாள் வரை வதங்காமல் ஃப்ரெஷ்ஷா இருக்கும்!
குறைந்த விலையில் வாங்கும் பூக்களை சில நாட்களிலேயே வீணாக்குவது பலருக்கும் கவலையளிக்கும் விஷயம். ஆனால், ஒருசில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பூக்களைக்கூட 2 வாரங்கள் வரை புதிதாக வைத்திருக்க முடியும்.
குறைந்த விலையில் வாங்கும் பூக்களை சில நாட்களிலேயே வீணாக்குவது பலருக்கும் கவலையளிக்கும் விஷயம். ஆனால், ஒருசில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பூக்களைக்கூட 2 வாரங்கள் வரை புதிதாக வைத்திருக்க முடியும்.
பூ வாங்கி இப்படி ஸ்டோர் பண்ணுங்க… 15 நாள் வரை வதங்காமல் ஃப்ரெஷ்ஷா இருக்கும்!
தினமும் பூக்களைப் பயன்படுத்துபவர்களுக்கு பெரிய சவால், அவற்றை வாடாமல் நீண்ட நாட்கள் பாதுகாப்பதுதான். குறைந்த விலையில் வாங்கும் பூக்களை சில நாட்களிலேயே வீணாக்குவது பலருக்கும் கவலையளிக்கும் விஷயம். ஆனால், ஒருசில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பூக்களைக்கூட 2 வாரங்கள் வரை புதிதாக வைத்திருக்க முடியும். பூக்களை வாடாமல் பாதுகாக்க உதவும் சில அற்புதமான வீட்டுக்குறிப்புகளை விஷ்மயா குடில் என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புகள், பூஜை அறைக்கோ அல்லது தலைக்கோ தினமும் பூக்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Advertisment
1. உதிரியாக வாங்கிய மல்லிக்கைப் பூக்களை நெருக்கமாக கட்டாமல் சிறிது இடைவெளிவிட்டு கட்டிவிட்டு, அதனை டிபன் பாக்சில் சேமிக்க வேண்டும். டிபன் பாக்ஸின் அடிப்பகுதியில் சிறிய வெள்ளை பேப்பர், வைத்து அதன் மீது கட்டிய பூக்களை வைக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றிற்கும் இடையே ஒரு வெள்ளை பேப்பர் என முழுவதுமாக வைக்க வேண்டும். பிறகு அதனை மூடிவிட்டு ப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
2. பூக்களை வாங்கியவுடன், உடனடியாக அவற்றை பாத்திரத்தில் வைத்து, தண்டுகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றவேண்டும். பூக்களுக்கு தேவையான ஈரப்பதம் தண்டுகள் வழியாக கிடைப்பதால், அவை நீண்ட நேரம் வாடாமல் இருக்கும். வெப்பம் பூக்களை வேகமாக வாட செய்யும். எனவே, தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வைத்த பூக்களை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது. இது பூக்களின் ஆயுளை கணிசமாக நீட்டிக்கும்.
3. தண்ணீரில் மூழ்கியிருக்கும் இலைகள் விரைவில் அழுகி, பாக்டீரியாக்களை உருவாக்கும். இது தண்ணீரை அசுத்தப்படுத்தி, பூக்களையும் சேதப்படுத்தும். எனவே, பூக்களை பாத்திரத்தில் வைக்கும் முன், தண்ணீரில் மூழ்கும் அனைத்து இலைகளையும் நீக்கிவிடுவது முக்கியம். பூக்களை வைக்கும் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பது அவற்றை நீண்ட நாட்கள் புதியதாக வைத்திருக்க உதவும் ஒரு எளிய ரகசியம். உப்பு பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கிறது.
Advertisment
Advertisements
பூக்களை வைத்திருக்கும் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். மேலும், பாத்திரத்தையும் சுத்தமாக கழுவி, புதிய தண்ணீரில் பூக்களை வைக்க வேண்டும். இது பூக்களுக்கு சுத்தமான சூழலை உருவாக்கி, வாடாமல் பாதுகாக்கும்.