குளிர்காலத்தின் வறண்ட சரும பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகள்!
How to take care of skin in winter season simple tips Tamil News குளிர்காலத்தில் அதிகப்படியான வறட்சியைத் தடுக்க சருமத்தைப் பராமரிப்பதற்கான வழிகாட்டியை இங்கே காணலாம்.
How to take care of skin in winter season simple tips Tamil News : குளிர்காலம் நெருங்கி விட்டது. இந்தப் பருவம் பலரால் விரும்பப்பட்டாலும், அது நம் சருமத்திற்கு சிறந்தது அல்ல. குளிர்ந்த குளிர்காலக் காற்று சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி, உலர்ந்ததாக மாற்றிவிடும்.
Advertisment
உங்களுக்கு வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் இருந்தால் உங்கள் சரும நிலை மோசமடையும். எனவே, உங்கள் சருமத்தை கவனமாகக் கையாளுவது அவசியம். குளிர்காலத்தில் அதிகப்படியான வறட்சியைத் தடுக்க சருமத்தைப் பராமரிப்பதற்கான வழிகாட்டியை இங்கே காணலாம்.
உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் இந்த எளிய குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள்
*வெந்நீர் குளியலைத் தவிர்க்கவும். *குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவேண்டாம். *அக்குள் மற்றும் இடுப்பு பகுதியில் மட்டும் தினமும் சோப்பை பயன்படுத்தவும். கிளிசரின் அடிப்படையிலான சோப்பை பயன்படுத்தவும்.
மெல்லிய காட்டன் துண்டு பயன்படுத்தவும்.
சருமம் ஈரமாக இருக்கும்போது மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
செரிமைடுகள் உள்ள மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.
பருத்தி ஆடைகளை அணியுங்கள். *கைகள் மற்றும் கால்களில் யூரியா அடிப்படையிலான கிரீம்களைப் பயன்படுத்துங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil