கைகளை நன்கு கழுவிய பிறகு... சுகர் லெவல் டெஸ்ட்; வீட்டிலேயே இப்படி எடுங்க: டாக்டர் கார்த்திகேயன் டிப்ஸ்
வீட்டிலேயே சர்க்கரை அளவை எவ்வாறு பரிசோதிக்கலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதற்கான செயல்முறை விளக்கத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டிலேயே சர்க்கரை அளவை எவ்வாறு பரிசோதிக்கலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதற்கான செயல்முறை விளக்கத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதற்காக தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீரான உணவு முறையை மக்கள் பின்பற்றுகின்றனர்.
Advertisment
அந்த வகையில், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சரியாக பரிசோதித்து அதற்கு ஏற்ப உணவு முறையையும், மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக அடிக்கடி பரிசோதனை கூடங்களுக்கு செல்ல சிரமமாக இருக்கும். அந்த வகையில் வீட்டிலேயே சுகர் அளவை எவ்வாறு பரிசோதிக்கலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.
முதலில், கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். கைகளை கழுவினாலும் எந்த இடத்தில் பரிசோதனை செய்யப் போகிறோமா அந்த இடத்தில் ஆல்கஹால் ஸ்வாப் கொண்டு மேலும் ஒரு முறை துடைக்க வேண்டும். இந்த ஆல்கஹால் ஸ்வாப்பை கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.
இப்போது, சிரிஞ்சில் ஊசியை மாட்டிக் கொள்ளலாம். இதையடுத்து, டெஸ்டிங் ஸ்ட்ரிப்பை க்ளூகோமீட்டரின் அடிப்பகுதியில் அதற்கான இடத்தில் பொருத்த வேண்டும். இறுதியாக, விரல் நுனியில் ஊசியை குத்திய பின்னர் வெளியாகும் இரத்தத்தை, டெஸ்டிங் ஸ்ட்ரிப்பில் வைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இப்படி வைத்தால் நம் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை க்ளூகோமீட்டரில் காணலாம். இதையடுத்து, டெஸ்டிங் ஸ்ட்ரிப் மற்றும் ஊசியை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.