அவுரி பொடியில் இந்த 2 பொருள் சேர்த்து பாருங்க... முடி கரு கருவென மாறும்; டாக்டர் தீபா அருளாளன்
கூந்தலுக்கு இயற்கையாக கருமை நிறம் சேர்க்க விரும்புவோருக்கு அவுரி பொடி சிறந்த தேர்வாகும். வீட்டிலேயே அவுரி பொடியைப் பயன்படுத்தி உங்கள் கூந்தலுக்கு கருமையான நிறத்தைப் பெற மருத்துவர் தீபா அருளாளன் கூறிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.
கூந்தலுக்கு இயற்கையாக கருமை நிறம் சேர்க்க விரும்புவோருக்கு அவுரி பொடி சிறந்த தேர்வாகும். வீட்டிலேயே அவுரி பொடியைப் பயன்படுத்தி உங்கள் கூந்தலுக்கு கருமையான நிறத்தைப் பெற மருத்துவர் தீபா அருளாளன் கூறிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.
அவுரி பொடியில் இந்த 2 பொருள் சேர்த்து பாருங்க... முடி கரு கருவென மாறும்; டாக்டர் தீபா அருளாளன்
கூந்தலுக்கு இயற்கையாக கருமை நிறம் சேர்க்க விரும்புவோருக்கு அவுரி பொடி சிறந்த தேர்வாகும். அவுரி பொடியை எப்படி சரியாகப் பயன்படுத்துவது என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். இதோ, வீட்டிலேயே அவுரி பொடியைப் பயன்படுத்தி உங்கள் கூந்தலுக்கு கருமையான நிறத்தைப் பெற மருத்துவர் தீபா அருளாளன் கூறிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்: அவுரி பொடி (3 டீஸ்பூன்), லேசான சூடான நீர் (கதகதப்பான நீர்), சிறு சிட்டிகை உப்பு, எலுமிச்சம்பழம்
குளிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன் இந்த கலவையைத் தயாரிக்கத் தொடங்கலாம். ஒரு பாத்திரத்தில் 3 டீஸ்பூன் அவுரி பொடியைப் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் லேசான சூடான நீரைச் சேர்த்து, உடனடியாக கலக்கத் தொடங்குங்கள். அதிக நேரம் கலக்க வேண்டியதில்லை. சுமார் 10 வினாடிகள் கலந்தால் போதும். கலக்கும்போது, ஒரு சிறு சிட்டிகை உப்பையும், ஒரு எலுமிச்சம்பழத்தை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியையும் சேர்க்கவும். எலுமிச்சம்பழம் நல்ல நிறம் வர உதவும். இந்தக் கலவையை நன்கு கலந்து, 30 வினாடிகள் மூடி வையுங்கள்.
பயன்படுத்தும் முறை: கலந்து தயாராக வைத்துள்ள அவுரி பொடி கலவையை உங்கள் தலையில் (கூந்தலில்) நன்கு அப்ளை செய்யவும். அப்ளை செய்த பிறகு, ஒரு மணி நேரம் அதை உங்கள் கூந்தலில் அப்படியே விடவும். ஒரு மணி நேரம் கழித்து, தலையை நன்கு குளிர்ந்த நீரில் அலசுங்கள்.
Advertisment
Advertisements
அவுரி பொடியை சரியாகப் பயன்படுத்தாவிட்டால், விரும்பிய நிறம் கிடைக்காமல் போகலாம். மிகவும் சூடான நீரைப் பயன்படுத்த வேண்டாம், லேசான கதகதப்பான நீர் போதுமானது. இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், அவுரி பொடியின் முழுப் பலனையும் பெற்று, உங்கள் கூந்தலுக்கு இயற்கையான கருமையான நிறத்தை அடையலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.