இஞ்சி இயற்கையின் அழகான பரிசு. பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக அறியப்பட்ட இஞ்சியைபச்சையாகவும், சமைத்தும், தோலுரித்து அல்லது உரிக்காமல் என பல வழிகளில் உட்கொள்ளலாம்.
Advertisment
ஆனால் இஞ்சியில் உள்ள அனைத்து சத்துக்களும் நீங்காமல்அதன் தோலை உரிக்க சரியான வழி இருக்கிறதா?
செஃப் கேத்தரின் மெக்பிரைட், இஞ்சி தோலை உரிக்க ஒரு பீலர் அல்லது கத்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஸ்பூனின் பின்புறத்தைப் பயன்படுத்த பரிந்துரைத்தார்.
இஞ்சி தோலை கத்தியால் உரிக்கும்போது, இஞ்சியின் அளவு வீணாகிவிடுவதால், ஆரோக்கியமான பல கூறுகள் இழக்கப்படுகின்றன.
இஞ்சி எவ்வளவு வளைவாக இருக்கிறதோ, அவ்வளவு கடினமாக கத்தியால் உரிக்க வேண்டும். நீங்கள் உரிக்க அதிக நேரம் எடுக்கும் போது, இஞ்சி கூழின் மேற்பரப்பில் ஆக்ஸிஜனேற்றம் தொடங்கி அதன் நன்மைகளை இழக்கத் தொடங்குகிறது.
கரண்டியை பயன்படுத்துவதால், விரைவாகவும் திறமையாகவும் இஞ்சியின் தோலை உரிக்கலாம். இது ஊட்டச்சத்துக்களை உள்ளே சேமிக்க உதவும். முடிந்தால், தேநீர் மற்றும் குழம்பு போன்றவற்றில் இஞ்சித் தோலை சேர்த்து நன்மைகளை அனுபவிக்கவும், என்று செஃப் கூறினார்.
அடுத்தமுறை இஞ்சி தோல் உரிக்கும் போது மறக்காம இந்த குறிப்பை முயற்சி பண்ணுங்க…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“