மருதாணியை நேரடியா முடிக்கு போடாதீங்க… இந்த பிரச்னை இருக்கு; டாக்டர் தீபா அருளாளன்
அழகை விரும்பும் பலரும், குறிப்பாக நரை முடியை மறைக்க விரும்புபவர்கள், மருதாணியை நாடிச் செல்கின்றனர். ஆனால், மருதாணி (அ) பிற ஹேர் பேக்குகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் தலைவலி பலருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது.
அழகை விரும்பும் பலரும், குறிப்பாக நரை முடியை மறைக்க விரும்புபவர்கள், மருதாணியை நாடிச் செல்கின்றனர். ஆனால், மருதாணி (அ) பிற ஹேர் பேக்குகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் தலைவலி பலருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது.
மருதாணியை நேரடியா முடிக்கு போடாதீங்க… இந்த பிரச்னை இருக்கு; டாக்டர் தீபா அருளாளன்
அழகை விரும்பும் பலரும், குறிப்பாக நரை முடியை மறைக்க விரும்புபவர்கள், மருதாணியை நாடிச் செல்கின்றனர். ஆனால், மருதாணி அல்லது பிற ஹேர்பேக்குகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் தலைவலி பலருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த பிரச்னையை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து டாக்டர் தீபா அருளாளன் ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.
Advertisment
மருதாணியால் தலைவலி ஏன் வருகிறது?
மருதாணி இயற்கையானது என்றாலும், அதை நேரடியாக அரைத்துப் பயன்படுத்தும்போது சிலருக்கு தலைவலி ஏற்படலாம். இதற்கு முக்கியக் காரணம், மருதாணியில் உள்ள குளிர்ச்சித் தன்மை. இது மண்டையில் ஈரத்தைக் கோர்த்து, தலைவலியைத் தூண்டும். பலர் வெறும் மருதாணி இலைகளை அரைத்துப் பூசுவதாலேயே இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.
நமது முன்னோர்கள் பாரம்பரியமாகப் பின்பற்றிய சில வழிமுறைகள் இந்த பிரச்னையைத் தீர்க்க உதவும். மருதாணி போடும்போது, தலைக்கு அதிக ஈரம் கோக்காமல் இருக்க சில பொருட்களைச் சேர்ப்பது அவசியம். மருதாணி அரைக்கும்போது ஒரு கொட்டை பாக்கைச் சேர்த்துக் கொள்ளுங்கள். 2 வெற்றிலைகளை சேர்த்து அரைப்பது தலைக்கு குளிர்ச்சி சேர்வதைக் குறைக்கும். இது மிகவும் முக்கியம். பூண்டு, மண்டையில் ஈரம் கோக்காமல் இருக்க உதவும். வெங்காயம் சேர்க்கும் ஹேர் பேக்குகளில் கூட பூண்டு சேர்க்க வேண்டும். மருதாணியுடன் சேர்த்து அரைத்துப் பூசும்போது, தலைக்கு அதிக ஈரம் கொடுக்காது, இதனால் தலைவலி வராது என்கிறார் டாக்டர் தீபா அருளாளன்.
Advertisment
Advertisements
ஹேர் பேக்குகளால் ஏற்படும் தலைவலியைத் தவிர்ப்பது எப்படி?
மருதாணி மட்டுமல்லாமல், எந்தவொரு ஹேர் பேக் பயன்படுத்தும்போதும் சிலர் தலைவலியால் அவதிப்படுகின்றனர். ஹேர் பேக்குகளை அரை மணி நேரம் தலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும் நிலையில், இது சிலருக்கு ஒற்றைத் தலைவலியைத் தூண்டிவிடுகிறது. ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு, இது 4 நாட்கள் வரை கூட நீடிக்கலாம். இதையும் தவிர்க்க, பூண்டு சிறந்த தீர்வாகும். நீங்கள் எந்த ஹேர் பேக் பயன்படுத்தினாலும், அதில் ஒரு பல் பூண்டு சேர்த்து அரைப்பது, மண்டையில் ஈரம் கோர்ப்பதைத் தடுக்கும். இது தலைவலியைத் தவிர்த்து, உங்கள் ஹேர் பேக் அனுபவத்தை இனிமையாக்கும்.