கருஞ்சீரகத்தில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதில் நல்ல அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.இது கெட்ட கொலஸ்ட்ரால் ஆக்சிஜனேற்றம் அடையாமல் தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறிக்கவும், இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். மேலும், இரத்த அழுத்தமும் குறையும். கருஞ்சீரக விதையை சாப்பிட்டால் ரத்த ஓட்டம் மேம்பட்ட, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.மேலும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ரால் படிவுகளும் வெளியேறி, அடைப்பு ஏற்படுவதை தடுக்கும்.
Advertisment
கருஞ்சீரகத்தில் ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் ஈரலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகளை வழித்தெடுக்கும். சளியால் ஏற்படும் கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும்
எப்படி சாப்பிடுவது?
கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை என இருவேளை சாப்பிடலாம் என்கிறார் மருத்துவர் ஆஷா லெனின்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.