முல்தானிமெட்டி உடன் இதை சேர்த்து தடவுங்க… முகப்பரு மறையும்; டாக்டர் மைதிலி
இளம் வயதில் ஆண்கள், பெண்களுக்கு முகப்பரு பிரச்னை தீராத ஒன்றாக உள்ளது. சரும ஆரோக்கியத்திற்கு முல்தானிமெட்டியின் பயன்கள் என்ன? முகப் பரு உள்ளவர்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி விளக்குகிறார் மருத்துவர் மைதிலி.
இளம் வயதில் ஆண்கள், பெண்களுக்கு முகப்பரு பிரச்னை தீராத ஒன்றாக உள்ளது. சரும ஆரோக்கியத்திற்கு முல்தானிமெட்டியின் பயன்கள் என்ன? முகப் பரு உள்ளவர்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி விளக்குகிறார் மருத்துவர் மைதிலி.
முல்தானிமெட்டியில் இருக்கக் கூடிய முக்கியமான ஊட்டச்சத்து மெக்னீசியம் குளோரைடு, கால்சியம் பென்டோனேட். இது இரண்டும் சேர்ந்து சருமத்தில் இருக்கக்கூடிய முகப்பரு, கருப்பு நிறப் புள்ளிகளை மறையச் செய்து முகத்தை பொலிவாக்குகிறது.
Advertisment
முல்தானிமெட்டியை எப்படி பயன்படுத்தலாம்?
ஒரு டீஸ்பூன் அளவு முல்தானிமெட்டி பொடியுடன் சமஅளவில் சந்தன பொடி, இதனுடன் கால் டீஸ்பூன் அளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து ரோஸ் வாட்டருடன் கலந்து நன்றாக குழைத்து முகத்தில் பேஸ் பேக் மாதிரி அப்ளை செய்ய வேண்டும். வாரத்துக்கு 2 முறை என 3 மாதத்திற்கு இப்படி செய்வதால், முகப்பருக்கள் மறைவதுடன் கருப்புநிற புள்ளிகள் காணாமல்போய்விடும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
முகப்பொழிவுக்காக பயன்படுத்தலாமா?
Advertisment
Advertisements
முகப்பொழிவுக்காக பயன்படுத்துபவர்கள் ஒரு டீஸ்பூன் அளவு முல்தானிமெட்டி பொடியுடன் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக குழைத்து முகம், கழுத்து பகுதியில் தடவ வேண்டும். இதனால், சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளை அனைத்தையும் நீங்கி ஒரே அளவில் சருமம் காட்சியளிக்கும். இறந்து போன செல்கள் அனைத்தையும் அகற்ற முல்தானிமெட்டி பயன் உள்ளதாக இருக்கும். இதனை வாரத்துக்கு ஒரு முறை பயன்படுத்தினாலே போதுமானது என்கிறார் மருத்துவர் மைதிலி.
கிருமி நாசினியாக பயன்படும் முல்தானிமெட்டி!
சருமத்துல சுருக்கங்கள், உள்ளவர்கள் வாரத்துக்கு ஒரு முறை ரோஸ் வாட்டர் அல்லது தயிர் கலந்து குழைத்து சருமத்துல போட்டுட்டே வரலாம். சீக்கிரமே வரக்கூடிய சரும சுருக்கங்களை தாமதப்படுத்தக்கூடிய தன்மையும் முல்தானிமெட்டில் அதிக அளவில் உள்ளது. கிருமி நாசினியாவும் செயல்பட்டு, காயங்களை குணப்படுத்தும் தன்மையும் இதில் உள்ளது என்கிறார் மருத்துவர் மைதிலி.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.