தினமும் ஒரு ஸ்பூன் இந்தப் பொடி மாரடைப்பை தடுக்கும்; 40 வருட ஆராய்ச்சி முடிவு: டாக்டர் கார்த்திகேயன்
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்ங்கற மூனு காய்களையும் சேர்த்து தயாரிக்கப்படுற பொடிதான் திரிபலா சூரணம். திரிபலா பொடியை ஏன், எதற்கு, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்ங்கற மூனு காய்களையும் சேர்த்து தயாரிக்கப்படுற பொடிதான் திரிபலா சூரணம். திரிபலா பொடியை ஏன், எதற்கு, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்ங்கற மூனு காய்களையும் சேர்த்து தயாரிக்கப்படுற பொடிதான் திரிபலா சூரணம். திரிபலா பொடியை ஏன், எதற்கு, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
Advertisment
அறிவியல் பூர்வ நன்மைகள்:
1980-ல் இருந்து 2020 வரை தான்றிக்காய் குறித்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 40 வருட ஆராய்ச்சியில் பல்வேறு கட்டுரைகளை ஒருங்கிணைத்து பைட்டோ மெடிசின் என்ற இதழில் அக்டோபர் 2022-ல் கட்டுரை வெளியாகியிருக்கிறது. 92 பக்க கட்டுரையில் அறிவியல் பூர்வ நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்குகிறார். திரிபலாவில் சேர்க்கப்படும் 3 வித கலவைகளும் பிரத்யேகமான மருத்துவ குணங்களை கொண்டவை. இவற்றில் குளுக்கோசைட், டானின்கள், கேல்லிக் அமிலம், கொரிலஜின் டெர்சபின், எலாஜிக் அமிலம், அர்ஜினைன் மற்றும் புரோலின், நியோசெபுலினிக் அமிலம், கொரிலஜின் டெர்சபின் மற்றும் புரதங்கள், எண்ணெய்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
Advertisment
Advertisements
திரிபலா ஒரு பாரம்பரிய மருந்து: ஆயுர்வேத மருத்துவத்தில் இந்தியா முழுவதும் பிரபலமானது இந்த திரிபலா பொடி. நெல்லி, கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதயநோய்கள் வராமல் தடுக்கும். புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
திரிபலா பொடி சாப்பிடுவதால் இருமல், நெஞ்சு சலி, ஆஸ்துமா போன்ற நோய்களின்போது நுரையீரலில் உள்ள சிறிய சுவாச குழாய்களை விரிவடைய செய்வதால், விரைந்து நோய் குணமாகும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுகளைத் தடுக்கும் சக்திகொண்டது திரிபலா பொடி. முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும். ரத்தசோகையை சரிசெய்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். ரத்தக் கட்டு ஏற்படாமல் தடுப்பு மாரடைப்பு வருவதை தடுக்கும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும். மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும். உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்கும். செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.