அழுக்கான வெள்ளை துணி பளிச்சென மாற… வீட்டில் இருக்கும் இந்த பொருள் போதும்; சிம்பிள் டிரிக் இதுதான்!
வெள்ளைத் துணிகளை நாம் என்னதான் கைகளால் துவைத்தாலும், வாஷிங் மெஷினில் துவைத்தாலும் நாளடைவில் அவை பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும். அப்படி அழுக்கான வெள்ளைத் துணிகள் பளிச்சென மாற, வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை உபயோகித்து பாருங்கள், பளிச்சென மாறிவிடும்.
வெள்ளைத் துணிகளை நாம் என்னதான் கைகளால் துவைத்தாலும், வாஷிங் மெஷினில் துவைத்தாலும் நாளடைவில் அவை பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும். அப்படி அழுக்கான வெள்ளைத் துணிகள் பளிச்சென மாற, வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை உபயோகித்து பாருங்கள், பளிச்சென மாறிவிடும்.
அழுக்கான வெள்ளைத் துணிகள் பளிச்சென மாற, வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை உபயோகித்து பாருங்கள், அழுக்கான வெள்ளைத் துணி பளிச்சென மாறிவிடும்.
வெள்ளைத் துணிகளை நாம் என்னதான் கைகளால் துவைத்தாலும், வாஷிங் மெஷினில் துவைத்தாலும் நாளடைவில் அவை பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும். அப்படி அழுக்கான வெள்ளைத் துணிகள் பளிச்சென மாற, வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை உபயோகித்து பாருங்கள், அழுக்கான வெள்ளைத் துணி பளிச்சென மாறிவிடும்.
Advertisment
வீட்டில் நம்முடைய துணிகளை வாஷிங் மெஷினில் எளிமையாக துவைத்தாலும் சில துணிகளை கையில் துவைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குறிப்பாக வெள்ளைத்துணிகள் மற்றும் குழந்தைகளின் சீருடை பளிச்சென இருக்க வேண்டும் என்று ஊற வைத்து கைவலிக்க மாங்கு மாங்கு என்று துவைப்போம். இப்படி பளிச்சென துணிகளை துவைத்தாலும் நாளடைவில் வெள்ளைத் துணிகள் பழுப்பு நிறத்தில் மாறிவிடும். அதுபோல, பழுப்பு நிறத்தில் மாறிய துணிகளை மீண்டும் வெள்ளையாக மாற்றுவது முடியாது. இதனால், அந்த வெள்ளைத் துணிகளை விட்டுவிட்டு புது வெள்ளை ஆடைகளை வாங்குவோம்.
ஆனால், நீங்கள் இந்த சூப்பரான டிப்ஸை பயன்படுத்தினால், வெள்ளை துணியில் அழுக்குகளை போக்க நீங்கள் கைவலிக்க மாங்கு மாங்கு என துவைக்க வேண்டாம். இந்த ஒரு பொருளை வைத்து வெள்ளை துணிகளுக்குகளை போக்கலாம். மேலும், அதன் பழுப்பு நிறத்தையும் அகற்றி விட முடியும்.
Advertisment
Advertisements
முதலில் ஒரு வாளியில் துணிகளை ஊற வைக்கும் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த தண்ணீரில் சோப்பு பவுடர் அல்லது லிக்விட் சேர்க்க வேண்டும். அடுத்து, நாம் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அடுத்து, துவைப்பதற்கு எடுத்து வைத்துள்ள வெள்ளைத் துணிகளை இந்த தண்ணீரில் பத்து முதல் 15 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த துணிகள எடுத்து நன்கு பிழியவும். பின்னர், அவற்றை வாஷிங்மெஷினில் போட்டு துவைத்து எடுத்தால் துணிகளில் இருக்கும் கரைகள் நீங்கி பளிச்சென மாறிவிடும். டூத் பேஸ்ட் துணிகளில் உள்ள கறைகள் மற்றும் பழுப்பு நிறத்தை எளிமையாக நீக்கிவிடும். இதனால், துணிகள் எப்போதும் புதிதுபோல வைத்திருக்க இந்த முறையை கையில் துவைக்கும் போதும் பயன்படுத்தலாம். துணிகளை ஊறவைத்து எடுத்து லேசாக சோப்பு போட்டாலே போதும் வெள்ளை துணி பளிரென மாறும் மேலும் படிந்து இருக்கும் பழுப்பு நிறமும் மாறிவிடும்.