கால்மிதியை 5 நிமிடத்தில் துவைக்கலாம்… சோப்பு தூளுடன் இதை மட்டும் சேருங்க!

உங்கள் கைகள் வலிக்காமல், வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் அழுக்குகள் அனைத்தையும் அகற்றி, கால்மிதிகளைப் புத்தம் புதியது போல மாற்றலாம்.

உங்கள் கைகள் வலிக்காமல், வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் அழுக்குகள் அனைத்தையும் அகற்றி, கால்மிதிகளைப் புத்தம் புதியது போல மாற்றலாம்.

author-image
WebDesk
New Update
How to wash door mats cleaning tips

How to wash door mats cleaning tips

அழுக்கடைந்த கால் மிதியடிகளை துவைப்பது ஒரு கடினமான வேலை. வாஷிங் மெஷினில் அடிக்கடி போட்டால் மிதியடிகள் விரைவில் சேதமடையலாம். ஆனால் இந்த மேஜிக் பொடியைப் பயன்படுத்தி கைகள் வலிக்காமல், ஐந்து நிமிடங்களுக்குள் அழுக்குகள் அனைத்தையும் அகற்ற ஒரு அற்புதமான வழி உள்ளது. 

Advertisment



ஒரு பக்கெட்டில் மிதமான சூடுள்ள தண்ணீரை எடுத்து, அதில் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் துணி சோப்பு லிக்விட் அல்லது பவுடருடன், ப்ளீச்சிங் பவுடர் ஒரு ஸ்பூன் சேர்க்கவும். (மூன்று முதல் நான்கு மிதியடிகளுக்கு ஒரு ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடர் போதும்).

நீளமான குச்சியைப் பயன்படுத்தி இந்த கலவையை நன்கு கலக்கவும். பின்னர் ஒவ்வொரு மிதியடியாக தண்ணீரில் போட்டு, குச்சியால் மிதியடியை அழுத்தி, அடித்து, சுழற்றவும். இரண்டு மூன்று நிமிடங்கள் இப்படிச் செய்வதால் அழுக்குகள் எளிதில் வெளியேறும். குச்சி பயன்படுத்த சிரமமாக இருந்தால், மிதியடிகளை ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் கால்களால் மிதித்து அழுக்குகளை அகற்றலாம்.


கடைசியாக, மிதியடிகளை அலசும் தண்ணீரில் சிறிதளவு கம்ஃபர்ட் மற்றும் டெட்டால் சேர்க்கவும். மிதியடிகளை இறுக்கப் பிழியாமல், ஒரு கம்பியில் தொங்கவிட்டு காயவிடவும். சுடுநீரில் அலசுவதால் மழைக்காலத்திலும் மிதியடிகள் விரைவில் காய்ந்துவிடும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: