புடவை! இந்தியப் பெண்களின் அடையாளம், குறிப்பாக தமிழ்நாட்டில் புடவை என்பது வெறும் ஆடை மட்டுமல்ல; அது ஒரு வாழ்வியல் முறை, ஒரு கலை வடிவம், ஒரு பாரம்பரிய அடையாளம். திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் புடவைக்கு ஒரு தனி இடம் உண்டு. அது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் என்பது தமிழர்களின் ஆழமான நம்பிக்கை.
Advertisment
எத்தனை நாகரிகங்கள் வந்தாலும், எத்தனை ஆடைகள் வந்து சென்றாலும், புடவையின் மீதான மோகம் ஒருபோதும் குறைவதில்லை. புடவை உடுத்துவது என்பது வெறும் துணியைச் சுற்றிக்கொள்வது அல்ல. அது ஒரு நுட்பமான கலை. ஒவ்வொரு மடிப்பிலும், ஒவ்வொரு சுருக்கத்திலும் ஒரு அழகு, ஒரு நேர்த்தி ஒளிந்திருக்கும். புடவையின் அழகை வெளிக்கொணர்வதில், உடுத்துபவரின் திறமை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
நீங்கள் இப்போது தான் புடவை கட்டி பழக போகிறீர்களா? இங்கு சாரீ டிரேபிஸ்ட் சுவாதி, புடவையை கச்சிதமாகக் கட்ட சில அற்புதமான குறிப்புகளை வழங்கியுள்ளார்.
Advertisment
Advertisements
ஃபர்ஸ்ட் டைம் சாரி கட்டுறவங்களுக்காக, ரொம்ப சிம்பிளான டெய்லி வேர் சாரியை எடுத்துக்கோங்க. சாரி கட்ட ஆரம்பிக்கும்போது, சாரி பார்டரோட அவுட்டர் டிசைன் வெளியில பார்த்த மாதிரி பிடிச்சுக்கோங்க. உங்க லெஃப்ட் டு ரைட் ப்ளீட் எடுங்க .
உங்களோட ஃபர்ஸ்ட் ப்ளீட் எப்பவுமே மத்த ப்ளீட்ஸை விட கொஞ்சம் பெருசா இருக்கணும். ஏன்னா அப்போதான் மத்த ப்ளீட்ஸ் ஷோல்டர்ல இருந்து வெளியில தெரியாம இருக்கும். உங்க பாடி ஷேப் அண்ட் சைஸுக்கு ஏத்த மாதிரி ப்ளீட்ஸோட சைஸ் மாறும். ஷார்ட் ஷோல்டர் இருந்தா ஃபர்ஸ்ட் ப்ளீட் சின்னதாவும், பிராட் ஷோல்டர் இருந்தா கொஞ்சம் பெருசாவும் எடுத்துக்கலாம்.
சாரி உல்ட்டாவா பிடிச்சிடக்கூடாதுன்னு, செஸ்ட் ப்ளீட்டோட லாஸ்ட் இன்னர் கார்னர்ல இருந்து டக்கின் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க.
சாரி சருகுறதை அவாய்ட் பண்ண, டக்கின் பண்ணும்போது லைட்டா ஒரு ரொட்டேட் பண்ணி டக்கின் பண்ணுங்க. அப்போ அந்த லைன் ஸ்ட்ரெயிட்டா இருக்கும். சென்டர் ப்ளீட் எடுக்கும்போது, லெஃப்ட்ல இருந்து ரைட்டுக்கு எடுங்க. எக்ஸஸ் கிளாத் வராம நீட்டா இருக்கும்.
சென்டர் ப்ளீட் எடுத்ததும், நல்லா ஒரு ஷேக் கொடுத்தா அதுவே நீட்டா அலைன் ஆகிடும்.
சைடுல எக்ஸஸ் கிளாத் இருந்தா, ஃபர்ஸ்ட் ப்ளீட்டை பெருசாக்கி அந்த எக்ஸஸை உள்ள கொடுத்துடுங்க. ஃபர்ஸ்ட் ப்ளீட் கொஞ்சம் பெருசா இருந்தா சாரி நல்லா லாங் ஸ்டே ஆகும். டக்கின் பண்றதுக்கு முன்னாடி, ப்ளீட்ஸ் எல்லாம் கொஞ்சம் வெளிய தெரியுற மாதிரி அலைன் பண்ணிக்கோங்க.
பின்ஸ் வெளியில தெரியாம இருக்க, ஃபர்ஸ்ட் ப்ளீட்டையும் லாஸ்ட் ப்ளீட்டையும் விட்டுட்டு மித்த பஞ்சை மட்டும் பின் பண்ணுங்க.
டக்கின் பண்ணும்போது, நல்லா இன்னும் கொஞ்சம் கீழ, ஃப்ளோர் கிட்ட டச் ஆகுற மாதிரி வைங்க. சைடுல இருக்கறதையும் லைட்டா சொருகிட்டு, அதுக்கப்புறம் சென்டர் ப்ளீட்டை அலைன் பண்ணுங்க.
முந்தி எண்ட்ல இருக்கற டேஸல்ஸை ஒண்ணா முடிச்சுப் போட்டா, டிரேப்பிங் இன்னும் நீட்டா இருக்கும்.