/indian-express-tamil/media/media_files/5YrB21Ra1ZKh8s1MY38X.jpg)
How to whiten teeth
பலர் தங்கள் பற்களை வெண்மையாக்க விலையுயர்ந்த சிகிச்சைகளை நாடுகிறார்கள், ஆனால் சோஷியல் மீடியா பிரபலம் ஆர்மென் ஆடம்ஜான், உங்கள் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அகற்றி, உங்கள் பற்களை வெண்மையாக்கும் ஒரு எளிய குறிப்பை பகிர்ந்துள்ளார்.
அதற்கு கிவி, வெள்ளரிக்காய் மற்றும் பேக்கிங் சோடா மட்டும் போதும்.
ஒரு பிளெண்டரில், சில கிவி துண்டுகள், கொஞ்சம் வெள்ளரி, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து ஒரு பேஸ்ட் போல நன்கு அரைக்கவும்.
இப்போது உங்களிடம் இருப்பது உங்கள் பற்களை வெண்மையாக்க இயற்கையான வழி. கிவியில் கால்சியம் நிரம்பியுள்ளது, மேலும் வெள்ளரி உங்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அகற்ற உதவுகின்றன, இது உங்களுக்கு வெண்மையான பற்களை தருகிறது என்று ஆடம்ஜன் அந்த வீடியோவில் கூறினார்.
வாரத்திற்கு இரண்டு முறை இந்த பேஸ்ட்டைக் கொண்டு பல் துலக்குங்கள், பிறகு வித்தியாசத்தை பாருங்கள். இயற்கையான பொருட்கள் இருக்கும் போது, உங்களது பற்களை வெண்மையாக்கும் பொருட்களுக்கு ஏன் இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும்? வெள்ளரி மற்றும் கிவி பழங்கள் சுவையானது மட்டுமல்ல, உங்கள் வாயையும் பற்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் சக்தி கொண்டது, என்று அவர் கூறினார்.
இருப்பினும், பல் மருத்துவர் டாக்டர் சாச்சி ஷிங்க்ரானி, வீட்டு வைத்தியத்துக்கு பதிலாக, ஹைட்ரஜன் பெராக்சைடைச் சார்ந்து இருப்பது சிறந்தது என்று வலியுறுத்தினார், இது கறைகளை அகற்ற சோதிக்கப்பட்ட வழியாகும்.
இந்த கலவையானது வாயை சுத்தப்படுத்த உதவும், ஆனால் உண்மையில் பற்களை வெண்மையாக்க முடியாது. வெண்மையாக்குவதற்கு, ஹைட்ரஜன் பெராக்சைடு தேவைப்படுகிறது, இது புதிய ஆக்ஸிஜனை வெளியிடுகிறது மற்றும் ஆக்சிஜனேற்றத்தைக் கொண்டு வருகிறது. இது பற்களில் இருக்கும் கறைகள் மற்றும் படிவுகளை உடைக்க உதவுகிறது என்று டாக்டர் ஷிங்க்ரானி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.