அரிசி மாவில் இதை சேர்த்து தேயுங்க… மஞ்சள் வெண்மையாக மாறும்!
நம்மளுடைய பற்களை எப்படி வெண்மையாக வைத்துக்கொள்வது என்பது குறித்தும் அரிசி மாவில் இதை சேர்த்து தேய்த்தால் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறும் என்று ஆமீனா ஆலோசனை வழங்கியுள்ளார். அரிசி மாவுடன் என்ன பொருள் சேர்க்க வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நம்மளுடைய பற்களை எப்படி வெண்மையாக வைத்துக்கொள்வது என்பது குறித்தும் அரிசி மாவில் இதை சேர்த்து தேய்த்தால் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறும் என்று ஆமீனா ஆலோசனை வழங்கியுள்ளார். அரிசி மாவுடன் என்ன பொருள் சேர்க்க வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
பற்கள் வெள்ளையாக வேண்டும் என்றால், அரிசி மாவில் இதை சேர்த்து தேய்த்தால் வெண்மையாக மாறும் என்று கேயார் லைஃப்ஸ்டைல் என்ற யூடியூப் (Keyaar Lifestyle) சேனலில் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
நம்மளுடைய பற்களை எப்படி வெண்மையாக வைத்துக்கொள்வது என்பது குறித்தும் அரிசி மாவில் இதை சேர்த்து தேய்த்தால் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறும் என்று ஆமீனா ஆலோசனை வழங்கியுள்ளார். அரிசி மாவுடன் என்ன பொருள் சேர்க்க வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
Advertisment
புன்னகைதான் நம்மைப் பற்றிய நல்ல அறிமுகத்தைக் கொடுக்கிறது. அப்படி நாம் புன்னகைக்கும்போது, நமது பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டும். சில காரணங்களால் மஞ்சள் தன்மையுடன் இருக்கும்போது அசௌகரியமாக உணர்கிறோம். அதனால், பற்கள் வெள்ளையாக வேண்டும் என்றால், அரிசி மாவில் இதை சேர்த்து தேய்த்தால் வெண்மையாக மாறும் என்று கேயார் லைஃப்ஸ்டைல் என்ற யூடியூப் (Keyaar Lifestyle) சேனலில் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆமீனா என்பக்வர் வழங்கிய ஆலோசனைகளை அப்படியே இங்கே தருகிறோம்.
நம்மளுடைய பற்களை எப்படி வெண்மையாக வைத்துக்கொள்வது என்பது குறித்து ஆமீனா கூறுகையில், நம்மளுடைய வெண்மையான பற்கள் தான் நம்மளுடைய முகத்துக்கு அழகு தரும்; நாம் எவ்வளவுதான் டிரஸ் பண்ணாலும், எவ்வளவுதான் மேக்கப் பண்ணினாலும் சரி நம்முடைய பற்கள் மஞ்சள் தன்மையில் இருக்கும்போதும் நம்முடைய தோற்றத்தை அது கெடுத்துவிடும். வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே நம்மளுடைய பற்களை நாம் வெண்மையாக மாற்றலாம்.
நான் உங்களுக்கு ஒரு சில டிப்ஸ் சொல்கிறேன். அதில் ஏதாவது ஒன்னு நீங்க யூஸ் பண்ணி உங்கள பற்களில் இருக்கக்கூடிய மஞ்சள் தன்மையை நீக்கி சரி செய்துவிடலாம். எதனால், பற்களில் மஞ்சள் கறை படிகிறது என்றால், டீ, காபி அதிகமா சாப்பிடுவதால், வெற்றிலைப் பாக்கு போடுவதால், அசிடிட்டி பிரச்னையினால், நம்ம பற்கள் மஞ்சளாகிவிடும். அந்த மஞ்சள் தன்மை நீக்கினால் உங்களுடைய பற்கள் வெண்மையாக மாறிவிடும்.
Advertisment
Advertisements
பற்கள் வெண்மையாக மாற, அரிசி மாவு ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த அரிசி மாவு பற்களுக்கு வெண்மையை தரும். மஞ்சள் தூள் ஒரு 1/2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். மஞ்சள் தூளில் விட்டமின் சி, மெக்னீசியம் அதிகமாக இருக்கிறது, இது பற்களுக்கு வலிமையை தரும்; பற்களில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழிக்கும்; துருநாற்றத்தை சுத்தம் செய்யும்; பற்களில் உள்ள சொத்தைப்பலையும் சரி செய்யும்.
அடுத்து, இதில் கொஞ்சமாக உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். அதுக்கப்புறம் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். இது பற்களில் இருக்கக்கூடிய ஈரையும் எனாமலையும் பாதிப்படைய செய்யாது. இதை நீங்க பிரஷ் பண்ற மாதிரி மெதுவா வாய சுத்தி நல்லா ரொட்டேட் செய்து வந்தால் கண்டிப்பாக சீக்கிரமே உங்க பற்களில் இருக்கக்கூடிய மஞ்சள் தன்மையை இது சரி செய்யும்.
இதே போல, இன்னொரு டிப்ஸ், சீரகத்தூள் ஒரு ஹாஃப் டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அது கூட கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். அதுக்கப்புறம் தக்காளி ஜூஸ் எடுத்து அது ஒரு டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சூண்டு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை நல்லா மிக்ஸ் பண்ணிட்டு தினமும் காலையில பிரஷ் பண்ணும் போது, பல் துலக்கி வந்தால் சீக்கிரமே உங்கள் பற்களில் படிந்து இருக்கக்கூடிய மஞ்சள் தன்மை நீங்கி விடும்.
இன்னொரு டிப்ஸ், இஞ்சி ஒரு துண்டு சீவி எடுத்துக்கொள்ளுங்கள். அதை தோல் சீவி எடுத்துட்டு அரைத்துக்கொள்ளலாம். அது கூட கொஞ்சம் லெமன் ஜூஸும் கொஞ்சூண்டு உப்பு சேர்த்து அதையும் நல்லா மிக்ஸ் பண்ணிட்டு நீங்க நல்லா பிரஷ் பண்ணிட்டு வந்தாலும் பற்களில் இருக்கக்கூடிய மஞ்சள் தன்மை நீங்கிவிடும்.
அடுத்த டிப்ஸ், நீங்கள் கொஞ்சம் பேஸ்ட்கூட கொஞ்சம் மஞ்சள் தூளும், கொஞ்சம் பேக்கிங் சோடாவும் மிக்ஸ் பண்ணி தினமும் பல் துலக்கிட்டு வந்தாலும் பற்களில் இருக்கக்கூடிய மஞ்சள் தன்மை நீங்கிவிடும். இதுல ஏதாவது ஒன்னு நீங்க ரெகுலரா பாலோ பண்ணிட்டு வந்தாலே சீக்கிரமே உங்களுடைய பற்களில் படிந்து இருக்கக்கூடிய மஞ்சள் தன்மையும் நீங்கிவிடும். வாயில் வரக்கூடிய துர்நாற்றத்தையும் சரி செய்துவிடும். வாயில் இருக்கக்கூடிய சொத்தை பற்களையும் இது சரி பண்ணிவிடும்” என்கிறார்.