hindu-temple | “வைகுண்ட ஏகாதசி நாளில் குறிப்பிட்ட முறையில் வழிபாடு செய்தால் பணக்கஷ்டம் நீங்கி, வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்திருக்கும்.
கோடீஸ்வர யோகம் அமையும்” என்பது இந்துக்களின் நீண்ட நாள் நம்பிக்கை ஆகும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி இன்று (டிச.23, சனிக்கிழமை) வருகிறது.
இந்நாளில் இரவு 9 மணிக்குள் தாமரை, வெள்ளை மொச்சை, கல் உப்பு, வெள்ளை சர்க்கரை என இந்தப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை ராகு, எமகண்டம் இல்லாத நேரம் பார்த்து வாங்க வேண்டும்.
தொடர்ந்து, மாதுளம் பழத்தை வாங்கி முத்துக்களாக உதிர்த்து, அதோடு தேன் கலந்து பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கலாம்.
மேலும், தாமரை மலரை மட்டும் வாடிய பிறகு கால் படாத இடத்தில் போட்டு விட்டு மற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் பூஜை அறையில் பச்சை கற்பூரம், துளசி, ஜாதிக்காய் உள்ளிட்ட பொருள்களையும் பயன்படுத்தலாம். இவை கெட்ட சக்திகளை அண்ட விடாது.
வைகுண்ட ஏகாதசி வரலாறு
ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஏகாதச என்னும் வடமொழிச் சொல்லுக்கு பதினொன்று என்று பொருளாகும்.
15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரனை மகாவிஷ்ணு அழித்தார். அப்போது வெளியான சக்திக்கு ஏகாதசி எனப் பெயர் வந்தது.
ஏகாதசி விரதம்
வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்' என்பது திருமால் வாக்கு .
இதில் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி மிக முக்கியமானது. இந்த நாளில் தென்னிந்தியாவில் சாதம் தவிர தோசை மற்றும் இட்லி உண்பார்கள். வட இந்தியாவில் பல்வேறு விதமான இனிப்புகள் எடுத்துக் கொள்வார்கள்.
துளசி சிறப்பு
ஆனால் ஏகாதசி விரதத்தின்போது துளசி 7 முறை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடலை சூடாக்கும். மற்ற ஆகாரங்கள் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் ஏகாதசி விரதத்தை உணவு உட்கொள்ளாமல் கடைப்பிடிப்பதே உத்தமம் என்பது ஆன்றோர்கள் வாக்கு. விரதத்தின்போது மண் பானை குளிர்ந்த நீர் எடுத்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“