Advertisment

பாலியல் ஆரோக்கியத்தை பாழாக்குமா செக்ஸ் படங்கள்? உளவியலாளர்கள் கூறுவது என்ன?

அந்த மாதிரியான வீடியோக்களை தொடர்ச்சியாக பார்ப்பதால் ஒருவரின் பாலியல் வாழ்க்கையில் பிரச்னை எழுமா? என்பது குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
watching porn frequently damage your sexual health

ஆபாச காணொலிகள் தொடர்பான பாலியல் கற்பனைக்கும் நிஜத்திற்கும் வேறுபாடு உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் தவழ்வதை பார்க்க முடிகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள், இணைய வசதி மூலமாக பார்ன் வீடியோஸ் என்னும் வயது வந்தோருக்கான படங்கள் மற்றும் காணொலிகளை எளிதில் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், ஆபாசத்தைப் பார்ப்பது ஒரு நபரின் பாலியல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா இல்லையா என்ற விவாதமும் தற்போது தூண்டப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், அடிக்கடி ஆபாசப் படங்களைப் பயன்படுத்துவது ஒரு நபரின் உறவுகள், பாலியல் திருப்தி மற்றும் மன ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் என உளவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
இவைகள், “பாலியல் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற தவறான எதிர்பார்ப்புகளை ஆபாசமாக அமைக்கிறது. இது பெரும்பாலும் ஏமாற்றங்களுக்கும் குறைந்த சுயமரியாதை உணர்விற்கும் வழிவகுக்கிறது” என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்ந்து, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை, தாமதமான விந்து வெளியேறுதல், பாலியல் திருப்தி குறைதல் மற்றும் 40 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளிட்டவையும் இருப்பதாக கூறுகின்றனர்.
மேலும் ஆபாச காணொலிகள் தொடர்பான பாலியல் கற்பனைக்கும் நிஜத்திற்குள் உள்ள வேறுபாட்டையும் இந்த உளவியல் நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.

அந்த வகையில், எந்த வகையான அடிமைத்தனமும் தீங்கு விளைவிக்கும். ஆனால் சூதாட்ட அடிமைத்தனம் போலல்லாமல், ஆபாச போதை குறித்து விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.
அதனால்தான் இந்த அடிமைத்தனத்தின் அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை புரிந்துக் கொண்டால் சரி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Lifestyle Porn
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment