கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த அசோக்-ரஞ்சனி தம்பதியரின் மகன் ஆரவ். 11 வயதான இவர்,சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயது முதலே ஹூலா ஹூப் எனும் சாகச வளையம் சுற்றுவதில் ஈடுபாடு கொண்ட இவர், சாகச வளையத்தை சுற்றி கொண்டே பல்வேறு செயல்களை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவரது அரிய திறமையை கண்ட இவரது பெற்றோர், இவருக்கு வழங்கிய பயிற்சியின் காரணமாக தற்போது கோவை வந்த சிறுவன் ஆரவ், இடுப்பில் வளையத்தை சுற்றுவதில் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அதன் படி சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது தாத்தா வீட்டில் நோபல் உலக சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் சிவ முருகன் முன்னிலையில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
இதில் சிறுவன் ஆரவ் இடுப்பில் வளையத்தை சுற்றி கொண்டே உடை மாற்றுவது, தண்ணீர் குடிப்பது, க்யூபிக் சரி செய்வது, வீடியோ கேம், செஸ் எனப் 10க்கும் மேற்பட்ட செயல்களை செய்தார். இதில் அவரது குடும்பத்தினர் மற்றும் சகோதரி வசுப்பிரதா ஆகியோர் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். ஆரவ் செய்த இந்த சாதனை முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“